செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

10th ரிசலட்: வழக்கம் போல் இல்லை… மாணவிகளை விட மாணவர்கள் அதிக தேர்ச்சி!

  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை (10.8.20) 9:30 மணியளவில் வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாகத் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என அரசு அறிவித்தது.


அதன்படி இன்று காலை http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in ஆகிய இணையத்தளங்களில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும், மாணவ, மாணவிகள் பள்ளியில் அளித்த தொலைபேசி எண்களுக்குத் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Posts: