திங்கள், 31 ஆகஸ்ட், 2020

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.

 நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

சில வங்கிகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பண பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்ளப்படும், ஒவ்வொரு பண பரிவர்த்தனைகள் மற்றும் பணம் செலுத்துதலுக்கு தனியாக கட்டணம் வசூலிப்பதாக தகவல்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அனைத்து வங்கிகளும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடப்பாண்டில் ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து அல்லது அதற்கு பின்னர் வசூலித்த கட்டண தொகையை வங்கிகள் உடனடியாக திருப்பி அளிக்க வேண்டும் என்றும், வருங்காலத்தில் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.