வியாழன், 13 ஆகஸ்ட், 2020

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸின் மன்னார்குடி பின்னணி

 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகின்ற நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளாது. இதில் துணை அதிபரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். துணை அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் கலிஃபோர்னியா செனெட் பதவி வகிக்கும் இந்திய வம்சாவளியான கமலா ஹாரீஸ் பெயரை பரிந்துரை செய்துள்ளார் ஜோ பிடன். இந்த கட்சி சார்பில் போட்டியிட இருக்கும் முதல் கறுப்பின பெண் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கமலா ஹாரிஸ் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்.இவரது தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள பைங்காநாடு கிராமத்தை சேர்ந்தவர்கள். ஸ்டெனோகிராஃபர் ஆக வாழ்க்கையை தொடங்கிய கோபாலன், ஆங்கிலேய அரசில் சிவில் சர்வீஸ் பணியில் பணியாற்றியவர். 1930-ம் ஆண்டு ஜாம்பியா நாட்டுக்கு கொடிசியாவில் இருந்து வந்த அகதிகளை கணக்கெடுப்பு செய்வதற்காக இந்திய அரசு சார்பில் அனுப்பிவைக்கப்பட்டார். பின்னர் அமெரிக்காவில் குடியேறியுள்ளார்.

“கமல ஹாரிஸை நான் தேர்வு செய்திருக்கிறேன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பயமற்ற போராளி, நாட்டின் சிறந்த பணியாளர்களில் ஒருவராக இருக்கும் கமலா ஹாரீஸை துணை அதிபர் பதிவுக்கு போட்டியிட தேர்வு செய்துள்ளேன்” என்று ட்வீட் பதிவிட்டுள்ளார். மேலும் உங்களுடன் இணைந்து ட்ரம்பை வெற்றி கொள்வோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

55 வயதான கமலா ஹாரிஸ் முதன்முறையாக செனேட்டர் பதவி வகிக்கும் அவர், அந்த கட்சியின் முக்கியமான நபர்களில் ஒருவராவார். அதிபர் பதவிக்கு போட்டியிட்டு பிரச்சாரங்களை நடத்திய பொறகு அக்கட்சியின் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக உருபெற்றுள்ளார்.

பிடனுடன் கமலா இணைந்து 2020 தேர்தலை சந்திக்க உள்ளார். நாட்டில் இருக்கும் மிக அசாதாரணமான சூழலில் இந்த தேர்தல் நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் 1,50,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை காட்டிலும் இங்கு இழப்புகள் அதிகம். மேலும் தொழில்கள் அனைத்தும் முடங்கி இருப்பதால் பொருளாதார சரிவையும் அந்நாடு சந்தித்து வருகிறது. இதே சூழலில் காவல்துறையினரின் அடக்குமுறைகள் மற்றும் இனப்பாகுபாடு ஆகியவற்றிற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

ட்ரெம்ப் இக்கட்டான சூழல்களை சரிவர கையாளாமல் இருப்பது பிடனுக்கு நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது. பிரச்சாரத்தில் அவரை வீழ்த்தும் வியூகத்தை வகிக்கும் பிடன் இந்த சூழலில் ஹாரிஸை போட்டியில் இணைத்துள்ளார். நாட்டின் மிகப் பெரிய மாகாணத்தில் பணியாற்றும் கமலா மருத்துவத்துறையில் செய்திருக்கும் சாதனைகளையும், நீதித்துறையில் அவர் ஆற்றிய பணிகள் குறித்தும் மேற்கோள் காட்டியுள்ளார் பிடன்.

கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனராலகவும், சான்ஃபிரான்சிஸ்கோவில் மாவட்ட வழக்கறிஞராகவும் அவருடைய பங்கீடுகள் ஆரம்ப காலத்தில் ஆராயப்பட்டது. பாரக் ஒபாமாவின் ஆட்சியின் போது பிடன் 8 ஆண்டுகள் துணை அதிபராக பொறுப்பு வகித்தார். தான் வகித்த பதவியை வகிக்க சரியான் ஆள் யாரென்று நீண்ட காலமாகவே யோசித்து இந்த முடிவை எடுத்துள்ளார். மார்ச் மாதம், தன்னுடைய துணை அதிபராக நிச்சயம் ஒரு பெண்ணை தான் தேர்வு செய்வேன் என்று அவர் ஏற்கனவே கூறியிருந்தார். இது ஜனநாயகக் கட்சியில் நிலவி இருந்த விரக்தியை தணித்தது.

இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற பி.வி. கோபாலனின் மகள் வழி பேத்தி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மட்ராஸ் மாகாணத்தில் உள்ள பைங்கனாடு பகுதியில் 1911ம் ஆண்டு பிறந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்ற அவர் ஜாம்பியாவிலும் பணியாற்றியுள்ளார்.