இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் சில நாட்களாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்ததற்கு, அதிகளவிலான மரணங்கள் கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படாததே காரணம் என தற்போது தெரியவந்துள்ளது.
ஆகஸ்ட் 9ம் தேதி 390 மரணங்களும், அதற்கு 2 தினங்களுக்கு முன்னதாக 260 மரணங்கள் பதிவாகியுள்ளன. அம்மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சீரான வேகத்தில் அதிகரித்து வருகிறது. அங்கு இறப்பு விகிதத்தின் அளவு 2 சதவீதத்திற்கும் கீழாக உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூன் மாதம் பிற்பகுதியில் இறப்புகள் 2 ஆயிரத்தை கடந்திருந்தது. இந்நிலையில், தற்போது நாள்ஒன்றுக்கு 700 முதல் 800 இறப்புகள் தினமும் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் அங்கு இறப்பு விகிதம் வரலாறு காணாத அளவில் குறைந்திருந்த நிலையில், அது தற்போது புதிய பாதிப்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையையும் சமஅளவில் அதிகரிக்க துவங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு இதுவரை 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இது சர்வதேச அளவில், அதிக கொரோனா உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ள நாடுகள் பட்டியலில், இந்தியா 5வது இடத்தில் உள்ளது. ஆனால் இறப்பு விகிதத்துடன் ஒப்பிடுகையில், இது சர்வதேச அளவிலான சராசரியான 3.7 சதவீதத்தை விட குறைவாகவே உள்ளது. இந்திய மக்கள்தொகையை கணக்கிடும்பட்சத்தில் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்த அளவே ஆகும். சர்வதேச அளவில் மற்ற ,நாடுகளில், 10 லட்சம் மக்களுக்கு 94 பேர் வீதம் மரணமடைந்துள்ள நிலையில், இந்தியாவில் இந்த விகிதம் 32 என்ற அளவிலேயே உள்ளது.
சர்வதேச அளவில் அதிக கொரோனா பாதிப்பு உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா, 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவில், 10 லட்சம் மக்களுக்கு 1,600க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் சர்வதேச சராசரி 2,569 ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த ஆந்திர பிரதேச மாநிலத்தில், தற்போது அங்கு பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.