புதன், 19 ஆகஸ்ட், 2020

பிரசாந்த் பூஷணுக்கு ஆதரவாக 1500 வழக்கறிஞர்கள் அறிக்கை!

 

Image

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பிரசாந்த் பூஷண் விவகாரத்தில், நீதியை சிதைக்காதீர்கள் என ஆயிரத்து 500 வழக்கறிஞர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

 

டெல்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, முன்னாள் தலைமை நீதிபதிகளை கடுமையாக விமர்சித்து, சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டார். இதை தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், பிரசாந்த் பூஷண் குற்றவாளி என தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை விவரம் வரும் 20ம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.

 

இந்நிலையில், 1,500 வழக்கறிஞர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், நீதித்துறையின் மீது ஏதேனும் தவறுகள் இருப்பின், அதை நீதிபதிகளிடமும், நீதிமன்ற அமர்வுகளுக்கும், பொது மக்களுக்கும் இயல்பாக சுட்டி காட்டுவது வழக்கறிஞர்களின் கடமை, என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பானது வழக்கறிஞர்களின் வெளிப்படைத்தன்மையையும், கருத்து சுதந்திரத்தையும் முடக்குவதாக அமையும் எனவும், கொரோனாவுக்கு பின்னர் இந்த வழக்கை, மறுவிசாரணை செய்ய வேண்டுமென்றும், அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.