ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

மத்திய அரசிடம் கலந்தாலோசிக்காமல், மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தக்கூடாது - மத்திய உள்துறை அமைச்சகம்

 மத்திய அரசிடம் கலந்தாலோசிக்காமல், மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தக்கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

4ம் கட்ட தளர்வில், மாநிலங்களுக்குள் பயணிக்கும் மக்களுக்கு இ-பாஸ் நிபந்தனை விதிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் கலந்தாலோசிக்காமல் மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.திரையரங்குகள், நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள் செயல்பட அனுமதி இல்லை என்றும், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் விரும்பினால் செப்டம்பர் 21-ம் தேதிக்கு பிறகு, பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதவீத ஆசிரியர்களுடன் ஆன்லைன் வகுப்புகள் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு விமான சேவைகளுக்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.