வியாழன், 20 ஆகஸ்ட், 2020

நீட் தற்கொலைகள் அரசே நடத்தும் கல்விக் கொலைகள்” - மு.க ஸ்டாலின்

Image

நீட் தேர்வு தோல்வியாலும், பயத்தாலும் நடக்கும் தற்கொலைகள் அனைத்தும் அரசே நடத்தும் கல்விக் கொலைகள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். 

 

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், அனிதாவில் தொடங்கிய மரணம் சுபஸ்ரீ வரை தொடர்கிறது என குறிப்பிட்டுள்ளார். கோவை மாணவி சுபஸ்ரீயின் தற்கொலைக்கு, மத்திய - மாநில அரசுகள் பதில் சொல்லியாக வேண்டும் எனவும், கொரோனா காலத்திலும் மாணவர்கள் நலன் குறித்த கவலையின்றி நீட் தேர்வை நடத்த மத்திய அரசு துடிப்பதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

 

நீட் தேர்வை எதிர்ப்பது போலக் காட்டிக் கொண்டு, மத்திய அரசு செய்வதற்கெல்லாம் தமிழக அரசு கைகட்டிக் கிடப்பதாகவும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கோவையில் சி.பி.எஸ்.இ பள்ளியில் பயின்று கடந்த ஆண்டு நடைப்பெற்ற நீட் தேர்வி 450க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற மாணவி சுபஸ்ரீ, பல் மருத்துவர் படிப்பிற்கு தேர்வானார்.

 

ஆனால் பொது மருத்துவர் பிரிவான MBBS படிப்பதற்காக சுபஸ்ரீ கூடுதலாக ஒரு ஆண்டு தயாராகி வந்தார். ஆனால் கொரோனா ஏற்படுத்திய குழப்பங்களால் தேர்வு ஒத்தி வைக்கப்படும் என எதிர்பார்த்தார். ஆனால் உச்சநீதிமன்றமோ அடுந்த மாதம் நீட் தேர்வு நடைபெறும் எனவும், மருத்துவ நுழைவுத்தேர்வை ஒத்திவைக்கவோ, ரத்து செய்யவோ முடியாது எனவும் கூறியதால், மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


source: https://ns7.tv/ta/tamil-news/tamilnadu-important/20/8/2020/suicides-because-neet-educational-murders-done-government