ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

கொரோனா வார்டில் கழிவறையை சுத்தம் செய்த அமைச்சர்!

Image

புதுச்சேரியில், அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர், கொரோனா வார்டில் சுத்தம் செய்யப்படாமல் இருந்த கழிவறையை, தானே சுத்தம் செய்த நிகழ்வு, அங்கிருந்த ஊழியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

புதுச்சேரியில் கோவிட் மருத்துவமனையாக செயல்படும் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ஏராளமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கொரோனா வார்டில் சுகாதார சீர்கேடு நிலவுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த அவர், கழிவறைக்கு சென்று பார்வையிட்டார்.

அப்போது, சுத்தம் செய்யப்படாமல் இருந்த கழிவறையை பார்த்ததும், ஏன்  சுத்தம் செய்யவில்லை என ஊழியர்களிடம் அவர் கேள்வி எழுப்பினார். ஆனால், ஊழியர்கள் சுத்தம் செய்தும் கரை போகவில்லை என கூற, அருகில் இருந்த துடைபானை எடுத்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவே சுத்தம் செய்தார். அமைச்சரின் இந்த செயலால், வேறு ஏதும் பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்த ஊழியர்கள் திகைத்து நின்றனர். 

Related Posts:

  • RSS உருவான பிறகே அயோத்தியில் ராமர் பிறந்தார் RSS உருவான பிறகே அயோத்தியில் ராமர் பிறந்தார் – வரலாற்றில் பாதுகாக்க வேண்டிய காணொளி….!!  http://kaalaimalar.net/raamar-birth-rss/ … Read More
  • பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது கலந்து பாம்பு… Read More
  • இந்தியாவின் முதல் செய்தித் தாள்.. இந்தியாவின் முதல் செய்தித் தாள் ’பெங்கால் கெசட்’ என்ற பெயரில் 1780-ஆம் ஆண்டு ஜனவரி 29-ல் வெளியானது. அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்க… Read More
  • பியூஷ் மனுஷ் கேள்வி :- சேலத்தைச் சேர்ந்த சமூக சேவகர், பியூஷ் மனுஷ் சிறையில் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளாரே? வன்மையான கண்டனத்திற்கு உரிய செய்தி அது. பியூஷ் மனுஷ… Read More
  • உங்களுக்கு தெரியுமா?: அமேசான் தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் பரவியிருக்கும் அமேசான் காடுகள் உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளாக அறியப்படுகிறது. உலகின் பெரும்பாலான மரம் மற்றும் … Read More