தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,860 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,32,105 ஆக உயர்ந்துள்ளது.
அதிர்ச்சியளிக்கும் கொரோனா உயிரிழப்புகள்:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 117 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,514 ஆக உயர்ந்துள்ளது.
அதிகரிக்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,236 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 2,72,251 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 54,213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு - பாலின வாரியான விவரம்:
தமிழகத்தில் இதுவரை தொற்று உறுதியான 3,32,105 பேரில், 2,00,253 பேர் ஆண்கள், 1,31,823 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 29 பேர் ஆகும். தமிழகம் முழுவதும் இதுவரை 36,40,796 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 71,343 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு:
சென்னையில் 1,179 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,15,444 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்:
ஆகஸ்ட் மாத பாதிப்பு விவரம்:
ஆகஸ்ட் 1 - 2,51,738
ஆகஸ்ட் 2 - 2,57,613
ஆகஸ்ட் 3 - 2,63,222
ஆகஸ்ட் 4 - 2,68,285
ஆகஸ்ட் 5 - 2,73,460
ஆகஸ்ட் 6 - 2,79,144
ஆகஸ்ட் 7 - 2,85,024
ஆகஸ்ட் 8 - 2,90,907
ஆகஸ்ட் 9 - 2,96,901
ஆகஸ்ட்10 - 3,02,815
ஆகஸ்ட் 11 - 3,08,649
ஆகஸ்ட் 12 - 3,14,520
ஆகஸ்ட் 13 - 3,20,355
ஆகஸ்ட் 14 - 3,26,245
ஆகஸ்ட் 15 - 3,32,105