வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட பல மடங்கு கொரோனா பரவல் அதிகம்: புதிய ஆய்வு

https://tamil.indianexpress.com/explained/what-the-serosurvey-results-in-india-imply-216034/#


  புனேவில் நடத்தப்பட்ட செரோலோஜிக்கல் சர்வே, கொரோனா பரிசோதனைகள் காட்டும் முடிவுகளைக் காட்டிலும் அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவல் நிகழ்ந்திருக்க கூடும் என்று முடிவுகள் தெரிவிக்கிறது. புனேவில் சோதனைக்குட்படுத்தப்பட்ட நபர்களில் 51%க்கும் மேற்பட்டோர் உடலில் கொரோனா வைரஸிற்கு எதிரான ஆண்ட்டிபாடிகள் உள்ளது என்பது கண்டறியப்பட்டது 40 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நகரத்தில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கும் என்றும் அம்முடிவுகள் தெரிவிக்கிறது.

ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 5 வரை செரோலாஜிகல் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட நேரத்தில், நகரத்தில் ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகையினருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் உண்மையான பரவல் உறுதிபடுத்தப்பட்ட எண்ணிக்கையை விட 20 மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுகிறது.

டெல்லி மற்றும் மும்பையில் நடத்தப்பட்ட ஆய்வுகளும் இதையே தெரிவித்தன. டெல்லியில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள், உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையை காட்டிலும் 40% மக்களுக்கு கொரோனா பரவியிருக்கும் என்று கூறப்பட்டது. மீண்டும் இந்திய தலைநகரில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை இருப்பினும் முந்தைய சோதனை முடிவுகளை மறு உறுதி செய்தது.

இந்திய செரோலாஜிக்கல் கணக்கெடுப்பு என்ன சொல்கிறது?

சோதனைகள் செய்வதற்கான உள்கட்டமைப்பு அதிகரித்து வருகின்ற போதிலும் சோதனைகளின் எண்ணிக்கை இன்னும் மோசமானதாகவே இருக்கிறது. மார்ச் மாத துவக்கத்தில் நூற்றுக்கணக்கில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது நாள் ஒன்றுக்கு 8 லட்சம் சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. சோதனைகள் உட்கட்டமைப்புகள் வளரத் துவங்கியுள்ளன. இருப்பினும் செரோலோஜிக்கல் சோதனை, கொரோனா நோய் தொற்று ஏற்பட்டவர்கள் பலருக்கும் சோதனை நடைபெறவில்லை, குறிப்பாக நோய் அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு என்பதை உறுதி செய்கிறது.

நோய் தொற்றை கட்டுப்படுத்த போதுமான சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போது தான் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தி, அவர்களுடன் தொடர்பில் இருந்த மற்றவர்களை கண்டறிய முடியும். அதிக சோதனைகள், நோய் தொற்று ஏற்பட்டவர்களை அதிகம் கண்டறிய உதவும், குறிப்பாக நோய் அறிகுறிகள் அற்றவர்களை . அதே போன்று தனிமைப்படுத்தலும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும். அதிக அளவிலான சோதனைகள் தான் கொரோனா பரவலை தடுக்கும் ஒன்றாக இருக்கும்.

இப்போது நோய் எவ்வளவு பரவலாக உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு, செரோபிரெவலன்ஸ் கணக்கெடுப்புகளின் முடிவுகளைப் பார்க்கும்போது, நோயின் வளர்ச்சியில் எந்தவொரு அர்த்தமுள்ள வித்தியாசத்தையும் ஏற்படுத்த சோதனை திறன் பல மடங்கு அதிகரிக்கப்பட வேண்டும். இது ஒரே நாள் இரவில் நடந்துவிடக் கூடியவை இல்லை. தொடர்ந்து மனிதர்களை சோதனை செய்வது மிகவும் முக்கியமானது. ஆனால் சோதனை செய்வதால் கொரோனா வளைவை கட்டுப்படுத்தும் காலத்தை நாம் கடந்துவிட்டோம்.

பல சோதனைகள் நடத்தப்பட்டு, மக்கள் போதுமான அளவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால், மந்தை நோய் தடுப்பு சக்தி என்ற நிலையின் முதல் நிலை சாத்தியம் அடைந்திருக்கும். ஆனால் அதிக அளவு சோதனைகள் நடத்தப்பட்டு, தனிமைப்படுத்தல் அதிகரித்த போது, நோயின் வளர்ச்சி குறைந்து, சமூகத்தில் அதிக அளவு நோய் தடுப்பு பரவலை தடுத்திருக்கும் என்பதே உண்மை. ஆனாலும் மக்கள் தொகையில் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்ட பின்னர் ஹெர்ட் கம்யூனிட்டி தோன்றும் என்பதில் வல்லுநர்கள் இன்னும் கண்டறியவில்லை. ஆனாலும் இந்தியா ஹெர்ட் கம்யூனிட்டி என்ற அளவை, அதிக அளவு சோதனைகள் என்ற நிலையைக் காட்டிலும், நோக்கி நகர்கிறது.

சீரோலஜிகல் கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்தும் சோதனை முடிவுகளுடன் எவ்வாறு தொடர்புபடுகின்றன?

புனேவில் நடத்தப்பட்ட ஆய்வுகள் பல முக்கிய முடிவுகளை கண்டறிந்துள்ளது. அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட வார்டு தான் மிகவும் குறைந்த வேகத்தில் வளர்ந்து வரும் ஒன்றாக கடந்த இரண்டு வாரம் இருந்து வருகிறது. லோஹியா நகர் என்ற பகுதியில் 60%க்கும் மேற்பட்டோர் உடலில் ஆண்ட்டிபாடிகள் உள்ளன. ஆனால் ஹெர்ட் கம்யூனிட்டி தோன்றிவிட்டதா என்று பரிந்துரைப்பது முன்கூட்டிய கூறும் ஒன்றாக இருக்கும். ஆனால் இந்த பகுதிகளில் இருக்கும் நோய் தொற்று அளவை கண்டறிந்து கொரோனா வைரஸ் ஒரே மாதிரியாக பரவுகிறதா என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிய வேண்டும். தற்போது எந்த முடிவையும் எட்டும் அளவில் தரவுகள் இல்லை.

வேறு சில குறிகாட்டிகளும் உள்ளன. டெல்லி, மும்பை அல்லது புனே போன்ற மிக அதிக பாதிப்பு விகிதங்களைக் கொண்ட நகரங்கள் ஏற்கனவே குறைந்து வருவதற்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியுள்ளன. டெல்லி மற்றும் மும்பையில் வளர்ச்சி விகிதங்கள் சில காலமாக குறைந்து வருகின்றன, புனேவும் இந்த வரிசையில் இணைந்து கொள்கிறது. ஆர் விகிதம் இங்கு குறைந்து கொண்டே வருகிறது. ஆர்- என்பது ஏற்கனவே பாதிக்கப்பட்ட ஒருவரால் சராசரியாக நோய்த்தொற்றுக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை. 1 ஐ விடக் குறைவான ஆர்-மதிப்பு, சராசரியாக, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் வைரஸை மற்றவர்களுக்கு அனுப்புவதில்லை. வழக்கமாக, 1 க்கு கீழே செல்லும் ஆர்-மதிப்பு தொற்றுநோயின் வீழ்ச்சியின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இருப்பினும் தற்போதைய நிலையில், தொற்றுநோய் இன்னும் இருப்பதால், தகவல் இன்னும் உருவாகி வருகிறது, மற்றும் ஆர்-மதிப்புகள் இருப்பதால் இதுபோன்ற முடிவுகளை எடுப்பதில் ஒருவர் கவனமாக இருக்க வேண்டும்.

சீரோலஜிகல் கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்தும் சோதனை முடிவுகளுடன் எவ்வாறு தொடர்புபடுகின்றன?

புனேவில் நடத்தப்பட்ட ஆய்வுகள் பல முக்கிய முடிவுகளை கண்டறிந்துள்ளது. அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட வார்டு தான் மிகவும் குறைந்த வேகத்தில் வளர்ந்து வரும் ஒன்றாக கடந்த இரண்டு வாரம் இருந்து வருகிறது. லோஹியா நகர் என்ற பகுதியில் 60%க்கும் மேற்பட்டோர் உடலில் ஆண்ட்டிபாடிகள் உள்ளன. ஆனால் ஹெர்ட் கம்யூனிட்டி தோன்றிவிட்டதா என்று பரிந்துரைப்பது முன்கூட்டிய கூறும் ஒன்றாக இருக்கும். ஆனால் இந்த பகுதிகளில் இருக்கும் நோய் தொற்று அளவை கண்டறிந்து கொரோனா வைரஸ் ஒரே மாதிரியாக பரவுகிறதா என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிய வேண்டும். தற்போது எந்த முடிவையும் எட்டும் அளவில் தரவுகள் இல்லை.

வேறு சில குறிகாட்டிகளும் உள்ளன. டெல்லி, மும்பை அல்லது புனே போன்ற மிக அதிக பாதிப்பு விகிதங்களைக் கொண்ட நகரங்கள் ஏற்கனவே குறைந்து வருவதற்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியுள்ளன. டெல்லி மற்றும் மும்பையில் வளர்ச்சி விகிதங்கள் சில காலமாக குறைந்து வருகின்றன, புனேவும் இந்த வரிசையில் இணைந்து கொள்கிறது. ஆர் விகிதம் இங்கு குறைந்து கொண்டே வருகிறது. ஆர்- என்பது ஏற்கனவே பாதிக்கப்பட்ட ஒருவரால் சராசரியாக நோய்த்தொற்றுக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை. 1 ஐ விடக் குறைவான ஆர்-மதிப்பு, சராசரியாக, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் வைரஸை மற்றவர்களுக்கு அனுப்புவதில்லை. வழக்கமாக, 1 க்கு கீழே செல்லும் ஆர்-மதிப்பு தொற்றுநோயின் வீழ்ச்சியின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இருப்பினும் தற்போதைய நிலையில், தொற்றுநோய் இன்னும் இருப்பதால், தகவல் இன்னும் உருவாகி வருகிறது, மற்றும் ஆர்-மதிப்புகள் இருப்பதால் இதுபோன்ற முடிவுகளை எடுப்பதில் ஒருவர் கவனமாக இருக்க வேண்டும். பாதிக்கப்படாத நபர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைகிறது, ஆகவே நோய்த்தொற்று ஏற்படக்கூடிய குறைவான நபர்கள் கிடைப்பதால் பரிமாற்ற வீதம் குறைகிறது.

உண்மையில், முக்கியமான எச்சரிக்கைகள் உள்ளன. செரோலாஜிக்கல் கணக்கெடுப்புகள் ஒரு மக்கள் குழுவில் நோய் பரவுவதற்கான வாய்ப்பை மட்டுமே வெளிப்படுத்துகின்றன. நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாக வேண்டிய அவசியமில்லை. விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதால், தொற்றுநோயைப் பெறுவது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பது இரண்டு வெவ்வேறு விஷயங்கள். நோய்க்கான குறிப்பிட்ட ஆன்டிபாடிகள் உள்ளவர்களின் எண்ணிக்கையை செரோலாஜிகல் கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது. இந்த ஆன்டிபாடிகள் இருப்பது ஒரு கட்டத்தில் அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பதற்கான அறிகுறியாகும்.

ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி “நடுநிலைப்படுத்தும்” ஆன்டிபாடிகள் அல்லது “பாதுகாப்பு” ஆன்டிபாடிகள் எனப்படுவதிலிருந்து வருகிறது. செரோலாஜிக்கல் ஆய்வுகள் நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளைக் கண்டறியவில்லை. அதற்கு, மற்றொரு சோதனை தேவை. ஏற்கனவே தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படவில்லை. இருப்பினும் இது விசாரனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய கேள்வியாக உள்ளது.

நோய்த்தொற்றுடையவர்களும் நோய்க்கு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொண்டால் மட்டுமே சமூக மட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி சாத்தியமாகும். விஞ்ஞானிகள் ஏற்கனவே பயிற்சிகளை மேற்கொள்ளத் தயாராகி வருகின்றனர், அங்கு பாதிக்கப்பட்ட நபர் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியிருக்கிறாரா என்பதை மதிப்பீடு செய்ய முயற்சிப்பார்கள். அதுவரை, “மந்தை நோய் எதிர்ப்பு சக்தி” பற்றிய விவாதங்கள் கணிசமாக இருக்காது.