வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு… அசோக் கெலாட் எதிர்கொள்ளும் சவால்கள்!

 ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இதில் முதல்வர் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சியான பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தானில் ஆட்சி புரிந்து வரும் காங்கிரஸ் ஆட்சியின் முதல்வர், அசோக் கெலாட்டிற்கும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையே கருத்து வேறுபாடு நிகழ்ந்தது. இதன் காரணமாக, தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சச்சின் பைலட் டெல்லி அருகே உள்ள முகாமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதற்குயிடையில், சச்சின் பைலட் மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கையை மேற்கொள்ள அசோக் கெலாட் அரசு முயற்சித்து வந்தது. இதனால் சச்சின் பைலட் தரப்பினர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் சபாநாயகரின் தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிராக முறையிட்டனர்.

இந்த வழக்கில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த வாரம், ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்த முதல்வர் அசோக் கெலாட், சட்டமன்றத்தை கூற விருப்பம் தெரிவித்திருந்தார். தனக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்பதை முதல்வர் அசோக் கெலாட் முடிவு செய்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த எம்எல்ஏக்கள் 6 பேர் அசோக் கெலாட் அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இவர்களை காங்கிரஸ் எம்.எல்.ஏக்களாக சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதனால், பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்களை காங்கிரஸ் எம்எல்ஏக்களாக அறிவித்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என அறிவிக்கக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குத் தொடர்ந்துள்ளது.மேலும், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது, அசோக் கெலாட் அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி கொறடா உத்தரவிட்டுள்ளார்.

இதனால் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது அசோக் கெலாட் அரசு தப்புமா என்ற கேள்வி எழுந்தது.

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் 200 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் பெரும்பான்மையை நிரூபிக்க அசோக் கெலாட் அரசுக்கு 101 எம்எல்ஏக்கள் தேவை. ஆனால், காங்கிரஸ் கூட்டணிக்கு 107 எம்எல்ஏக்கள் ஆதரவும், சில சுயேச்சை எம்எல்ஏக்களிப் ஆதரவும் இருக்கிறது.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் குலாப் சந்த் கட்டாரியா நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,“சட்டப்பேரவைக் கூட்டம் நாளை தொடங்கியதும், ஆளும் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளோம்.அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரலாம். இல்லாவிட்டால் நாங்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கோருவோம்” எனத் தெரிவித்தார்.

அதே போல், 2 தினங்களுக்கு முன்பு, சச்சின் பைலட் கடந்த இரு நாட்களுக்கு முன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியைச் சந்தித்துப் பேசினார்.இதனால் மீண்டும் அவர் காங்கிரஸில் இணைந்து ராஜஸ்தான் அரசுக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்ற பிம்பத்தையும் உருவாக்கியுள்ளார். அனைத்துவித கேள்விகளுக்கு இன்று கூடும் சட்டப்பேரவையில் விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.