தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 6 சென்டி மீட்டரும், சின்னகல்லாரில் 5 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் தேவாலா, கூடலூர் பஜார், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஆகிய இடங்களில் தலா 3 சென்டி மீட்டர்
மழை பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.