ஓகி புயலில் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தைப் பார்வையிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீனவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சின்னத்துறை கிராமத்திற்குச் சென்ற ராகுல்காந்தி, ஓகி புயலில் சிக்கி பலியான மற்றும் மாயமான மீனவர்களின் குடும்பத்தினரையும், மீனவ சங்க பிரதிநிதிகளையும் சந்தித்தார். ராகுல் காந்தியுடன் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கே.ஆர். ராமசாமி, விஜயதரணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். ஓகி புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து மீனவர்களிடம் கேட்டறிந்த ராகுல்காந்தி மாயமான மீனவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெறுகிறதா என்பதையும் மீனவர்களுடனான கலந்துரையாடல் மூலம் ஆய்வு செய்தார்.
பின்னர் மீனவர்கள் மத்தியில் பேசிய ராகுல்காந்தி, இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போதெல்லாம் கன்னியாகுமரி மாவட்டம் பெரும் அழிவுகளை சந்திப்பதாக வேதனை தெரிவித்தார். மத்தியிலும், தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாவிட்டாலும் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்னையை தீர்க்க மத்திய, மாநில அரசுகளுக்கு காங்கிரஸ் கடும் அழுத்தம் தரும் என்றும் அவர் கூறினார். மீனவர்களின் பிரச்சனையை வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காங்கிரஸ் எழுப்பும் என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டார்.