நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற அரசு பொருட்காட்சி துவக்க விழாவில் பள்ளி மாணவர்களின் முன்பு ஆபாச நடனம் அரங்கேற்றப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் அரசு பொருட்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொருட்காட்சிக்கான தொடக்க விழாவில் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். அப்பொழுது அந்த விழாவில் வெளிமாநில அழகியின் ‘பெல்லி டான்ஸ்’ (Belly Dance) எனப்படும் ஆபாச நடனம் அரங்கேற்றப்பட்ட நிகழ்வு பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நடைப்பெற்றபோது அரசு அதிகாரிகளும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நடனம் நடைபெற்ற மேடையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படமும், தமிழகத்தின் துணை முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வத்தின் உருவப்படம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சிக்கு தமிக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.