சனி, 2 ஜூன், 2018

கருப்புப்பணம், பினாமி சொத்துக்கள் குறித்து தகவல் தருவோருக்கு ரூ.5 கோடி வரை பரிசு! June 1, 2018

Image

கருப்புப்பணம், பினாமி சொத்துக்கள் குறித்து தகவல் தரும் பொதுமக்களுக்கு 5 கோடி ரூபாய் வரை பரிசு அளிக்கும் வெகுமதி திட்டம் குறித்த அறிவிப்பை முதல் முறையாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

பினாமி சொத்துக்கள் பரிவர்த்தனைகள் பரிசுத் திட்டம் 2018 என்ற புதிய திட்டத்தினை வருமான வரித்துறை இன்று அறிவித்துள்ளது.

திருத்தப்பட்ட வருமான வரி சட்டத்தின்படி, ஒருவரின் வரி ஏய்ப்பு அல்லது வெளிநாட்டில் சொத்து மறைத்து வைக்கப்பட்டது குறித்து, வருமான வரித்துறையின் விசாரணை அதிகாரிகளிடம் முறையாக தகவல் அளித்தால், அவர்களுக்கு ரூ.50 லட்சம் வரை பரிசு வழங்கப்படும்.

வெளிநாட்டில் கருப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டது குறித்து தகவல் வருவோருக்கு 5 கோடி ரூபாய் வரை பரிசு வழங்கப்படும்.
 
For the first time ever, Govt has introduced reward up to ₹5 crore with objective of attracting & encouraging people to give info.about such income & assets as are actionable under the Black Money(Undisclosed Foreign Income & Assets)& Imposition of Tax Act, 2015.
பினாமி சொத்து பரிவர்த்தனை குறித்த சட்டத்தின் கீழ், பினாமி சொத்து மற்றும் பரிமாற்றம் தொடர்பாக தகவல் அளித்தால், அவர்களுக்கு 1 கோடி ரூபாய் வரை பரிசு வழங்கப்படும். தகவல் அளிப்போரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருப்புப் பணம் மற்றும் ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் முயற்சியில் அரசுடன் இணைந்து பொதுமக்களும் பங்கு பெற வழிவகை செய்யும் முயற்சியாகவே இந்த பரிசுத் திட்டத்தினை அறிவித்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் கீழ் எந்தத் தனிநபரும், வெளிநாட்டினரும் இந்தியர்கள் குறித்த பினாமி சொத்துக்கள், பரிமாற்றம் குறித்து வருமானவரித்துறை இணை ஆணையர் அல்லது கூடுதல் ஆணையர்களிடம் தகவல் அளிக்கலாம்.