திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் விவசாயிகள்,மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சேவூர், ஆதனூர், வெள்ளேரி லாடவரம், இரும்பேடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் குளிர்ந்த காற்றுடன் அரை மணி நேரத்திற்க்கும் மேலாக இடி மின்னல் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியடைந்ததால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கடந்த ஒரு மாதமாக அதிக வெப்பம் வாட்டி வந்த நிலையில், நேற்று பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. வந்தவாசி மட்டுமின்றி அதன் சுற்றுப்புறப்பகுதிகளான சென்னா ரம், பிருதூர், அம்மயப்பட்டு, மும்முனி மற்றும் பாதிரி பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் நிலத்தடி நீர் உயரும் என விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. நேற்று மாலை 3 மணி நேரத்திற்கும் மேலாக செங்கம், போளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான தோக்கவாடி, பரமனந்தல் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது