செவ்வாய், 17 ஜூலை, 2018

இன்றிரவுக்குள் 100 அடியை எட்டவுள்ள மேட்டூர் அணையின் நீர் மட்டம்! July 17, 2018

Image
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த 4 நாட்களில் மட்டும் முல்லை பெரியார் அணையின் நீர்மட்டம் 6 அடி உயர்ந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தேனி மாவட்டத்தில், கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக கடந்த 4 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 6 அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 125 அடியில் இருந்து 131 அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரத்து 770 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரத்து 573 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மழைப்பொழிவு தொடர்ந்தால் அணை தனது முழுகொள்ளளவான 142 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தேனி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதே போல் வைகை அணையின் நீர் மட்டமும் 48.88 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் கம்பம் பள்ளதாக்கு விவசாயிகள் முதல்போக சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.