ஜப்பானில் வீசி வரும் அனல் காற்று காரணமாக கடந்த 3 நாட்களில் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜப்பானில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. அப்போது பெய்த கனமழை காரணமாக அங்கு 200 பேர் உயிரிழந்த நிலையில் உடனடி மாறுதலாக அங்கு கடும் வெப்பம் நிலவி வருகிறது. அதாவது அதிகபட்சமாக அங்கு சுமார் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.
அதுமட்டுமின்றி சராசரியாக ஜப்பானின் அனைத்து பகுதிகளிலும் 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. இதையடுத்து கடும் வெயில் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குடையின்றி வெளியில் வரமுடியாத அளவு வெப்பநிலை ஜப்பானை வாட்டிவதைத்து வருகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் வயதானோர் வெளியில் வருவதற்கு மிகுந்த சிரமமாக உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்
சோகம் என்னவெனில் சமீபத்தில் மழை காரணமாக ஏற்கனவே 200 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது ஜப்பானில் வீசி வரும் அனல் காற்று காரணமாக கடந்த 3 நாட்களில் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்