மீன் சாப்பிடுவதன் மூலம் அதிக நாட்கள் உயிர்வாழ முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மீனில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி அமிலம் (Omega 3 Fatty acid), கேன்சர், இதய கோளாறுகள் ஏற்படாமல் தடுப்பதுடன் அதிக காலம் உயிர்வாழ உதவுகிறது.
16 ஆண்டுகளாக 2,40,729 ஆண்கள் மற்றும் 1,80,580 பெண்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்தியதில், 54,230 ஆண்களும், 30,882 பெண்களும் இறந்துவிட்டனர். அந்த ஆராய்ச்சியில் இருந்து ஒமேகா 3 ஃபேட்டி அமிலம் அவர்கள் நீண்ட காலம் உயிர்வாழ்வதற்கு உறுதுணையாக இருந்துள்ளது. அதாவது, மீன் சாப்பிடுபவர்கள் அதிக காலம் உயிர்வாழ்ந்திருக்கின்றனர். அவர்களுக்கு இதய கோளாறு மற்றும் புற்றுநோய் ஏற்படவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மீன்கள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
1. புரத சத்து நிறைந்தது:
உடல் எடையை குறைக்கக்கூடிய புரத சத்து, மீன்களில் அதிக அளவு இருப்பதால் உடலுக்கு மிகுந்த நன்மை அளிக்கிறது.
2. தாது சத்துக்கள் நிறைந்தது:
மேங்கனீஸ், பொட்டாசியம், சோடியம் போன்ற உடலுக்கு தேவையான தாதுக்கள் மீன் சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கு கிடைக்கிறது.
3. கொழுப்பை கரைக்கும்:
மீனில் இருக்கும் ஒமேகா 3 ஃபெட்டி அமிலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைக்க உதவுகிறது.
4.கண்களுக்கு நல்லது:
அடிக்கடி மீன் சப்பிடுவது கண்களுக்கு மிகவும் நல்லது. பார்வை திறனை அதிகரிக்க உதவுவதுடன் வயது காரணமாக ஏற்படும் கண் நோய் வராமல் தடுக்கிறது.
5.வைட்டமின் D நிறைந்தது:
மீன் சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் D சத்து கிடைக்கிறது. மேலும், எலும்பு மற்றும் பற்கள் வலுவாக இருக்கும்