மேட்டூர் அணையில் இருந்து கடந்த 19ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர், நேற்றிரவு கல்லணை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் டெல்டா பாசனத்திற்காக கல்லணை திறக்கப்பட்டது. இந்த நீர் மூலம் விவசாயிகள் தங்கள் பாசனத்தை தொடங்க முடியும். இதனால், தற்போது டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரியில் இருந்து வரும் நீரை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கல்லணையை ஒட்டி அமைந்துள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தற்போது மேட்டூர் அணை 117 அடியை எட்டி இருக்கிறது. இன்று முழு கொள்ளளவையை எட்ட உள்ளதால் மொத்தமாக மதகுகள் உயர்த்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு, வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்.பி., வைத்திலிங்கம் உள்ளிட்டோர் மலர் தூவி கல்லணையை டெல்டா பாசனத்தி