பொதுத்துறை வங்கிகள் பயன்படுத்தும் 74 சதவிகித ஏடிஎம்கள் காலாவதியான விண்டோஸ் XP மென்பொருள்களுடன் இயங்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பழைய இயங்குதளத்துடன் கூடிய கணினிகளை வைரஸ் தாக்கினால், அதிலுள்ள தரவுகளை எளிதாக திருட முடியும் என்ற நிலையில், வங்கிகள் அதனை சட்டை செய்யாமல் இருப்பது வங்கி மோசடிக்கு வழிவகுத்துவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
2019-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் புதிய மென்பொருளுடன் ஏ.டி.எம்.களை நிறுவுமாறு ரிசர்வ் வங்கி ஏற்கெனவே சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. எனினும் மென்பொருள் அப்டேட் செய்யப்படாமல் இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.