வியாழன், 19 ஜூலை, 2018

திருமணம் என்பது பெண்கள் எப்போதும் உடலுறவுக்கு தயாராக இருக்க வேண்டும் என அர்த்தமாகாது - டெல்லி உயர்நீதிமன்றம் July 18, 2018

Image

​திருமணம் என்பது பெண்கள் எப்போதும் உடலுறவுக்கு தயாராக இருக்க வேண்டும் என அர்த்தமாகாது என டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

‘திருமண பாலியல் வன்புணர்வு’ ஒரு குற்றம் என அறிவிக்கக்கோரியும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருதரப்பின் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கீதா மிட்டல் மற்றும் நீதிபதி ஹரிசங்கர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, திருமணம் போன்ற உறவின் போது பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகிய இருதரப்புக்குமே உடலுறவுக்கு மறுப்பு தெரிவிக்க உரிமை உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

திருமணம் என்பது பெண்கள் எப்போதும் உடலுறவுக் தயாராகவும், விருப்பத்துடனும், இணக்கத்துடனும் இருப்பதாக அர்த்தம் ஆகாது, சம்பந்தப்பட்ட பெண் அதற்கு தயாராக இருப்பதாக ஆண் நிரூபிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், உடல் ரீதியாக வற்புறுத்துவது மட்டுமே பாலியல் வன்புணர்வு ஆகிவிடாது, உடலில் உள்ள காயங்கள் குறித்து ஆராய தேவையில்லை, கணவன் தனது மனைவியின் குடும்பத் தேவைகளுக்கான பணத்தை உடலுறவு கொண்டால் மட்டுமே தருவேன் என்று மனரீதியாக துன்புறுத்துவம் பாலியல் வன்புணர்வாகவே கருத வேண்டும், இன்றைய காலகட்டத்தில் பாலியல் வன்புணர்வுக்கு அர்த்தம் முற்றிலும் மாறிவிட்டதாகவும் அவர்கள் கூறினர். 

எனினும் இது தொடர்பாக எந்த ஒரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்பதால் வழக்கை வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

RIT Foundation என்ற NGO அமைப்பும் (அரசு சாரா தன்னார்வ அமைப்பு), அனைத்து இந்திய ஜனநாயக மகளிர் சங்கமும் திருமண பாலியல் வன்புணர்வு ஒரு குற்றம் என அறிவிக்கக்கோரி மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், அதனை மறுத்து ஆண்கள் நல அறக்கட்டளை என்ற அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.