ஹாஜிமார்களுக்கு எந்த வகையில் பயன்? ****************************************************** தமிழக அரசு ஹாஜிமார்களுக்கு ஆறு கோடி ரூபாய் மானியம் அளித்ததற்காக நன்றி தெரிவித்து மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் நன்றி தெரிவித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதே போல கோவை ஆதம் ஹஜ் சர்வீஸ் நிறுவனத்தார்கள் மானியம் வழங்கிய முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்திருக்கிறார்கள். தமிழக அரசு ஹாஜிமார்களுக்கு வழங்கியதாக கூறப்படும் ஆறு கோடி ரூபாய் ஹாஜிமார்களுக்கு எந்த வகையில் பயன் அளிக்கும்?.. இந்த மானியம் ஹஜ் கமிட்டி மூலம் செல்லும் ஹாஜிமார்களுக்கா?.. அல்லது தனியார் டிராவல்ஸ் மூலம் செல்லும் ஹாஜிமார்களுக்குமா? இந்த மானிய உதவி மூலமாக விமானம் மற்றும் இதர செலவுகளில் ஏதாவது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதா? மனித நேய ஜனநாயக கட்சியினர் அல்லது ஆதம் சர்வீஸ் நிறுவனத்தார்கள் அல்லது விபரம் தெரிந்த யாராவது கொஞ்சம் விபரித்தால் - சமூகம் விளக்கம் பெற மற்றும் விழிப்புணர்வு பெற உதவும்.!
source: Mujeeburrahman Siraji i FB