
வயதாவது மற்றும் கண்களுக்கு அதிகமான சிரமம் கொடுப்பதால், கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது என்று மட்டுமே பெரும்பாலானோர் எண்ணுகின்றனர். ஆனால், ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்ளாமல் இருப்பதாலும் பார்வை கோளாறுகள் ஏற்படுகின்றன என்று நம்மில் பலருக்கு தெரியாது.
அதனால், கண் பிரச்சனைகளில் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள, ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கண் பிரச்சனைகளை தடுக்க உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள்:
1. மீன்:
மீன்கள் சாப்பிடுவதால், omega 3 fatty acid நம் உடலுக்கு கிடைக்கிறது. இந்த அமிலம், நம் கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், கண்களின் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது.
2.பருப்பு வகைகள்:
பருப்பு வகைகளில் அதிக அளவு வைட்டமின் E சத்து மற்றும் omega 3 fatty acid உள்ளதால், வயது காரணமாக வரும் கண் பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுகிறது. முந்திரி, வேர்கடலை போன்ற பருப்பு வகைகள் கண் பார்வைக்கு மிகவும் நல்லது.
3. சிட்ரஸ் அமிலம் அதிகமாக உள்ள பழங்கள்:
சிட்ரஸ் அமிலம் அதிகமாக இருக்கும் பழங்களில் வைட்டமின் E சத்து நிறைந்திருக்கும். மேலும், கண் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும் anti oxidents -ம் நிறைந்திருக்கும். அதனால், சிட்ரஸ் அமிலம் அதிகம் உள்ள பழங்களான எழுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்கள் கண் பார்வைக்கு மிகவும் நல்லது.
4. கீரை வகைகள்:
கீரை வகைகளில் வைட்டமின் C சத்து அதிக அளவில் உள்ளதால், கண் தொடர்பான பிரச்சனைகள் வராமல் இருக்க உதவுகிறது.
5. கேரட்:
கேரட்டில், பீட்டா கரோடின் மற்றும் வைட்டமின் A சத்து அதிகமாக உள்ளது. வைட்டமின் A சத்து, கண் பார்வைக்கு மிகவும் அவசியமான ஒன்று. கண்களுக்கு மிகவும் முக்கியமான Rhodopsin என்ற புரதம் சுரப்பதற்கு வைட்டமின் A சத்து மிகவும் அவசியம்.
6. சக்கரவள்ளிக்கிழங்கு:
கேரட்டை போலவே, சக்கரவள்ளிக்கிழங்கிலும் அதிக அளவு பீட்டா கரோட்டின் உள்ளது. இது, கண் பார்வைக்கு மிகவும் நல்லது.
7.மாட்டு இறைச்சி:
மாட்டு இறைச்சியில் சிங்க் (ZINC) எனப்படும் தாது இருப்பதால், கண்களுக்கு மிகவும் நல்லது. கோழிக்கறி, ஆட்டுக்கறி போன்றவற்றிலும் சிங்க் இருக்கிறது. ஆனால், மாட்டு இறைச்சியில் சிறிது அதிக அளவில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
8.முட்டை:
வயது தொடர்பான கண் பிரச்சனைகள் வராமல் தடுக்க முட்டை உதவுகிறது. முட்டையில் வைட்டமின் C, E மற்றும் சிங்க் (ZINC) இருப்பதால், கண்களுக்கு மிகவும் நல்லது.
9. தண்ணீர்:
குறிப்பிட்ட இடைவேளையில் தண்ணீர் பருகுவது, கண்களுக்கு மிகவும் நல்லது. மேலும், கண்களில் ஈரப்பதத்தை தக்கவைக்க, தண்ணீர் உதவுகிறது.