திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில் இருந்து மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது வரையிலான நிகழ்வுகள்..
வீடு முதல் மருத்துவமனை வரையிலான பரபரப்பு நிமிடங்கள்
நள்ளிரவு 12 மணி - திமுக தலைவர் கருணாநிதியின் தனி மருத்துவர் கோபால், கோபாலபுரம் இல்லம் வருகை.
நள்ளிரவு 12.10 மணி - தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கோபாலபுரம் வருகை
நள்ளிரவு 12.15 மணி - கோபாலபுரத்தில் தொண்டர்கள் குவிய தொடங்கினர்
நள்ளிரவு 12.20 மணி -மு.க. அழகிரி கோபாலபுரம் வருகை
நள்ளிரவு 12.23 மணி - தி.மு.க முதன்மை செயலாளர் துரைமுருகன் கோபாலபுரம் வருகை
நள்ளிரவு 12.30 மணி - முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கோபாலபுரம் வருகை
நள்ளிரவு 12.40 மணி - கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் கோபாலபுரம் வருகை
நள்ளிரவு 12.50 மணி - கருணாநிதியின் துணைவியார் ராசாத்தியம்மாள் வருகை
நள்ளிரவு 1 மணி - காவிரி மருத்துவமனை ஆம்புலன்ஸ் கோபாலபுரம் வந்தது.
நள்ளிரவு 1.10 மணி - காவிரி மருத்துவமணையில் தொண்டர்கள் குவிய தொடங்கினர்.
நள்ளிரவு 1.20 மணி - கருணாநிதி ஆம்புலன்ஸ் மூலம் காவிரி மருத்துவமனை புறப்பட்டார்
நள்ளிரவு 1.30 மணி - காவிரி மருத்துவமனையில் 4-வது மாடியில் உள்ள தீவிர கண்காணிப்பு பிரிவில் திமுக தலைவர் கருணாநிதி அனுமதி
நள்ளிரவு 1.40 மணி - ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் காவிரி மருத்துவமனை வருகை
நள்ளிரவு 2.20 மணி - கருணாநிதியின் ரத்த அழத்தம் சீரானதாகவும், அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் ஆ.ராசா பேட்டி.
நள்ளிரவு 2.30 மணி - சிகிச்சைக்குப் பின் கருணாநிதியின் ரத்த அழுத்தம் சீரானதாகவும், மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை
source: Ns7 tv
http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/28/7/2018/karunanidhi-hospital-minutes-hassle-home-hospital