இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் அமெரிக்காவில் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளான்.
தனிஷ்க் ஆப்ரஹாம் என்ற 15 வயது சிறுவன் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து பயோமெடிக்கல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.
இளம் வயது முதலே படிப்பில் மிகவும் சிறந்து விளங்கியவராக திகழ்ந்த தனிஷ்க், எண்ணற்ற பிரிவுகளில் இணையங்களில் போட்டித் தேர்வுகளை சந்தித்து வெற்றி பெற்றுள்ளார்.
மிக இளம் வயதிலேயே, தனது வயதைத் தாண்டிய கல்வியறிவு பெற்றிருந்ததால் 11 வயதிலேயே UC Davis எனப்படும் கலிஃபோட்னிய பல்கலைக்கழகத்தில் சேர வாய்ப்பு பெற்றார். தற்போது 15 வயதில் தனது பொறியியல் பட்டப்படிப்பை சிறந்த நிலையில் நிறைவு செய்து பட்டம் பெற்றுள்ளார்.
மேற்கொண்டு Phd எனப்படும் பட்ட மேற்படிப்பை தொடர விண்ணப்பம் செய்து அசத்துகிறார் தனிஷ்க்.
மாணவர் தனிஷ்கின் சாதனை குறித்து அவரின் குடும்பத்தினர் பூரிப்படைந்துள்ளனர். இவரின் தாயார் கால்நடை மருத்துவர் ஆகவும், தந்தை மென்பொருள் வல்லுனர் ஆகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கர்கள் மத்தியில் சிறுவன் தனிஷ்கின் சாதனை இந்தியா குறித்த நன்மதிப்பை மேலும் அதிகரித்துள்ளது.