வியாழன், 19 ஜூலை, 2018

தினமும் முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்! July 19, 2018

Image


தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் எந்த நோயும் ஏற்படாது என்பது போல, தினமும் ஒரு முட்டை சாப்பிட்டாலும் நோய்களில் இருந்து தப்பிக்கலாம். 

முட்டையை தினமும் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது அல்ல என்பது பலரிடையே நம்பப்பட்டுவரும் பொய்யான தகவல். இதயம் தொடர்பான நோய் உள்ளவர்கள் மட்டுமே தினமும் முட்டை சாப்பிடக்கூடாது. மற்றவர்கள் சாப்பிடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

1. ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் (Omega 3 Fatty Acid):

மீன்களில் உள்ளதுபோல், முட்டையில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. அதனால், தினமும் முட்டை சாப்பிடுவது, கண் பார்வைக்கும், மூளை செயல்பாடுகளுக்கும் மிகவும் நல்லது. மீன் பிடிக்காதவர்கள், முட்டை சாப்பிடுவதன் மூலம் Omega 3 Fatty Acid-ன் நன்மை உடலுக்கு கிடைத்துவிடும்.

2. நல்ல கொழுப்பை அதிகரிக்கும்:

முட்டை சாப்பிடுவதன் மூலம், உடலில் நல்ல கொழுப்புகள் அதிகரிக்கும். இதனால், வலிப்பு நோய், இதயம் தொடர்பான நோய் வராமல் தடுக்கலாம்.

3. புரத சத்து அதிகரிக்கும்:

மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு புரத சத்து மிகவும் அவசியம். ஒரு முட்டையில் 6 கிராம் புரதம் இருப்பதால் முட்டை சாப்பிடுவது மிகுந்த நன்மை அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல், உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் முட்டையில் நிறைந்திருப்பதால், எலும்புகளை வலுப்பெறச்செய்கிறது.

4. கண்களுக்கு மிகவும் நல்லது:

lutein மற்றும் zeaxanthin என்ற மிக முக்கியமான இரண்டு அமினோ அமிலங்கள் முட்டையில் இருப்பதால், கண்புரை போன்ற கண் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. இதுமட்டுமல்லாமல், முட்டையில் வைட்டமின் A சத்து இருப்பதால் கண்களுக்கு மிகவும் நல்லது.

5. மூளைக்கு மிகவும் நல்லது:

நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவேண்டும் என்றால், மூளையும் ஆரோகியமாக இருக்க வேண்டும். முட்டையில் மூளைக்கு தேவையான வைட்டமின் மற்றும் மினரல் அதிக அளவில் இருப்பதால், நமது மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. 

6. உடலுக்கு தேவையான தாதுக்கள் அதிகமாக இருக்கிறது:

முட்டை சாப்பிடுவதால், இரும்பு, சிங்க் (zink), பாஸ்பரஸ் முதலிய தாதுக்கள் நம் உடலுக்கு கிடைக்கிறது. இரும்புச்சத்து, மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று. சிங்க், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நாம் சாப்பிடும் உணவு பொருட்களை உடலுக்கு தேவையான சக்தியாக மாற்றுகிறது. இதுபோன்ற தாது சத்துக்கள் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு வழிவகுக்கும்.

இதுபோன்று அதிக அளவு சத்துக்கள் இருப்பதால் முட்டை, நம் ஆரோக்கியத்திற்கு அதிக அளவு வழிவகுக்கிறது.