பருவநிலை மாற்றம் காரணாமாக உடல் நிலையில் சில கோளாறுகள் ஏற்படுவது இயல்பு. அதிலும், நாள் முழுக்க சோர்வாக இருப்பதும் எந்த விஷயத்திலும் முழுமையான கவனம் செலுத்த முடியாமல் போவது போன்ற விஷயங்களும் இதில் அடங்கும். அதையும் தாண்டி, நம் உணவு பழக்கங்களில் சில மாற்றத்தை கொண்டுவருவது மூலம், எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.
1. காலையில் தானிய வகை உணவுகளை உட்கொள்ளுங்கள்:
பசிக்கேற்ற உணவு உண்பது சுறுசுறுப்பாக இருப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. காலை உணவாக தானியங்கள் நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ளுதல் நம் உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சியை அதிகரிக்கிறது.
2. தேனில் கலந்த உணவுப்பொருட்களை சாப்பிடலாம்:
தேனில் கலந்த நெல்லிகாய், பருப்பு வகைகள், உலர் பழ வகைகளை சாப்பிடுவது உடலில் சோர்வு ஏற்படுத்தாமல் தடுக்கிறது.
3. ஓட்ஸ் சாப்பிடலாம்:
ஓட்ஸ் சாப்பிடுவதன் மூலம், புரத சத்து மற்றும் நார் சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கிறது. குறைவான ஓட்ஸ் சாப்பிடுவதன் மூலம் அதிக அளவு கலோரிக்களை பெற முடியும். மேலும், கொழுப்புச்சத்தை கரைக்கச்செய்து உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
4.க்ரீன் - டீ குடிக்கலாம்:
இனிப்பான மற்றும் கார்பன் டை ஆக்சைடு அடைக்கப்பட்ட குளிர்பானங்களை விட க்ரீண்டீ குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. மேலும், உடல் எடையை குறைக்கவும், உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றவும் உதவுகிறது.
4.அதிக தண்ணீர் பருகலாம்:
ஆரோக்கியமான மற்றும் புத்துணர்ச்சியான வாழ்க்கைக்கு சரியான இடைவேளையில் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். தண்ணீர் குடிப்பதன் மூலம், நம் உடலில் உள்ள தேவையற்ற நச்சுப்பொருட்களை அகற்றுகிறது. அதுமட்டுமல்லாமல், உடல் புத்துணர்ச்சியிடன் இருப்பதற்கு உதவுகிறது.