செவ்வாய், 24 ஜூலை, 2018

பேருந்து வசதி இல்லாமல் தவிக்கும் புதுக்கோட்டை கொத்தகப்பட்டி கிராம மக்கள்! July 24, 2018

Image


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே சாலை, பேருந்து வசதி உள்ளிட்டவைகளை செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொத்தகப்பட்டி கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட மண் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறி விடுதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சாலையில் விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் பயணம் செய்வதில் சிரமம் உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே கொத்தகப்பட்டி கிராமத்தில் சாலை வசதி பேருந்து வசதி அமைத்து தரக்கோரி அப்பகுதி கிராம பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுக்காவில் கொத்தகப்பட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து தஞ்சாவூர் பிரிவு சாலை மூன்று கிலோமீட்டர்  தொலைவில் உள்ளது.

இந்த சாலை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மண்சாலையாக போடப்பட்டன. பின்னர் இந்த சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் அப்பகுதி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து கொத்தகப்பட்டியில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு பள்ளிக் குழந்தைகள் நடந்து வருகின்றனர்.

மழைகாலங்களில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் இந்த கிராமத்தில் இருந்து தஞ்சாவூருக்கு வேலைக்கு செல்வதற்கு இந்த சாலை வழியாகத்தான் செல்லவேண்டி உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும் சட்ட மன்ற உறுப்பினரிடமும் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

தற்போது அந்த சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதி பள்ளி குழந்தைகள் முதியவர்கள் சாலையில் செல்லும் விபத்திற்கு உள்ளாகின்ற சூழ்நிலை நிலவுகிறது. மேலும் இரவு நேரங்களில் அந்த சாலையில் போக முடியாத சூழ்நிலை இருக்கிறது.

சாலை இருபுறங்களிலும் முற்புதற்கள் அகற்றப்படாமல் இருக்கின்றன. இதனால் பாம்புகள் விஷ பூச்சிகள் அதிக அளவில் நடமாடி வருகின்றது. சாலை ஓரங்களில் தெருவிளக்கு இல்லாததால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். 

எனவே இது குறித்து தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதிக்கு சாலை வசதி தெருவிளக்கு பேருந்து வசதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறினார்கள்.