சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிரான மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மாட்டிறைச்சி பிரச்னை, குழந்தை கடத்தல் வதந்தியால் நாடு முழுவதும் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர். சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படும் வதந்தியால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, நாடு முழுவதும் 716 மாவட்டங்களில் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டன.
தனிமனித சுதந்திரத்திலும், கண்ணியத்திலும் தலையிடும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மௌவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.