திங்கள், 16 ஜூலை, 2018

காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்தது July 16, 2018

Image


காவிரியின் துணை ஆறுகளான அக்ராவதியில் கழிவு நீர் கலந்ததால் தண்ணீர் மாசடைந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்திலுள்ள தொழிற்சாலைகளிலிருந்து காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கோரி தமிழக அரசு தொடர்ந்த மனு மீது தனது 2ம் கட்ட அறிக்கை மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் இன்று தாக்கல் செய்தது.

அதில், காவிரியின் பிரதான ஆற்றில் கழிவுநீர் கலக்கவில்லை எனவும், காவிரியின் துணை ஆறுகளான அக்ராவதி தென்பெண்ணையாற்றிலும் நீர் மாசடைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

எனவே இதை தடுக்க கர்நாடக அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பாக கழிவு நீர் சுத்திகரிப்பு முறையை மேம்படுத்த வேண்டும் என்றும் மாசு கட்டுபாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு  2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.