சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தபோது டோக்லாம் விவகாரம் குறித்து பேசாதது ஏன்? என பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, பிரிக்ஸ் மாநாட்டின் இடையே ஜி ஜின்பிங் உடன் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தியதை சுட்டிக்காட்டினார். அப்போது, டோக்லாம் குறித்து மோடி பேசாதது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டின் எல்லைகள் குறித்தும், பாதுகாப்பு பற்றியும் நரேந்திர மோடிக்கு கவலை இல்லையா என கேள்வி எழுப்பியுள்ள ரன்தீப் சுர்ஜேவாலா, இதற்கான பதிலை நாட்டு மக்கள் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
source : ns7.tv/ta/tamil-news/india-politics/28/7/2018/congress-questioned-prime-minister-narendra-modi