செவ்வாய், 24 ஜூலை, 2018

பிரிக்ஸ் மாநாடு என்றால் என்ன? July 24, 2018

Image


தென் ஆப்பிரிக்காவில் வரும் நாளை முதல் முதல் 27ம் தேதி வரை பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.

பிரிக்ஸ் கூட்டமைப்பு பற்றிய அடிப்படைத் தகவல்கள்

➤பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா நாடுகளின் கூட்டமைப்பு தான் பிரிக்ஸ்

➤5  நாடுகளின் முதல் எழுத்தை கொண்டு ஆங்கிலத்தில் BRICS என்ற பெயர் உருவாக்கப்பட்டது

➤சர்வதேச பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளுக்கு போட்டியாக பிரிக்ஸ் உருவாக்கப்பட்டது

➤உலக மக்கள்தொகையில் 40% பேர் பிரிக்ஸ் நாடுகளில் உள்ளனர்

➤உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% பிரிக்ஸ் நாடுகளின் பங்களிப்பு

➤உலக வங்கி, IMFக்கு போட்டியாக நியூ டெவலப்மெண்ட் பாங்க் என்ற பெயரில் வங்கி தொடங்கப்பட்டுள்ளது

➤சர்வதேச அரங்கில் வளர்ந்த நாடுகளின் ஆதிக்கத்திற்கு சவாலாக பிரிக்ஸ் அமைப்பு பார்க்கப்படுகிறது 

➤பிரிக்ஸ் அமைப்பின் 10-வது மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடைபெறவுள்ளது

➤சில நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா வர்த்தக போர் தொடுத்துள்ள நிலையில் பிரிக்ஸ் மாநாட்டு முக்கியத்துவம் பெறுகிறது