
புதுக்கோட்டைக்கு வரும் தமிழக ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்ட உள்ளதாக திமுக அறிவித்துள்ளது.
நாளை புதுக்கோட்டை செல்லும் ஆளுநர் தூய்மை இந்தியா திட்ட பணிகளை பார்வையிடுகிறார். மேலும் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களது கோரிக்கை மனுக்களையும் பெறுகிறார். இதனிடையே புதுக்கோட்டைக்கு வரும் ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட உள்ளதாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் ஆகிய இருவரும் இதனை அறிவித்துள்ளனர். மேலும் நாளை காலை புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.