ஞாயிறு, 15 ஜூலை, 2018

மாசடைந்த காற்றால் மக்கள் உயிரிழக்கும் நகரங்களின் பட்டியலில் 3 வது இடம் பிடித்த டெல்லி July 15, 2018

Image

உலகில் காற்றால் அதிக மக்கள் உயிரிழக்கும் நகரங்கள் குறித்து, தாய்லாந்து, சிங்கப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுடன், மும்பை ஐஐடி  ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, முக்கிய நகரங்களில்  ஆய்வு நடத்தப்பட்டது. 

இந்த ஆய்வின் முடிவில், 2016 ஆம் ஆண்டில், காற்றில் உள்ள நச்சு துகள்களால் டெல்லியில் 14 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

அந்த நகரங்களில் பட்டியலில் டெல்லி 3வது இடத்தில் உள்ளது. பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. பெய்ஜிங்கில் 18 ஆயிரத்து 200 பேரும், ஷாங்காய் 17 ஆயிரத்து 600 பேரும் உயிரிழந்ததாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

இதேபோன்று, கராச்சியில் 7 ஆயிரத்து 700 பேரும், மும்பையில் 10 ஆயிரத்து 400 பேரும், கொல்கத்தாவில் 7 ஆயிரத்து 300 பேரும்,  பெங்களூரு மற்றும் சென்னையில் மொத்தம் 4 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்ததாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.