புதன், 18 ஜூலை, 2018

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் தொடர்பான வழக்குகளின் நிலை என்ன? July 18, 2018

Image



இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் நிலை குறித்த செய்தி.....

இந்தியாவில் தினமும் 55 குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன.

கடந்த 2013 முதல் 2016 வரையிலான மூன்று ஆண்டுகளில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 84 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்திய நீதிமன்றங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக சுமார் ஒரு லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் எப்போது தீர்ப்பளிக்கும் என எதிர்பார்த்தால், அதற்கு பல்லாண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது அதிர்ச்சியான உண்மை.

உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், தங்கள் வழக்கின் தீர்ப்புக்காக 2026ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.

டெல்லி மற்றும் பீகாரில் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் வழக்கின் தீர்ப்புக்காக 2029ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.

இந்த பட்டியலில் அருணாச்சலபிரதேசம் மிக மோசமான இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக வழக்கு தொடுத்த பெண் குழந்தைகள் 2071ம் ஆண்டுக்கு முன் தீர்ப்பை எதிர்பார்க்க முடியாது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.