வியாழன், 26 ஜூலை, 2018

இஞ்சி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்! July 25, 2018

Image

உணவில் சுவையை அதிகப்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவும் இஞ்சி இருக்கிறது. 

தலைவலி, காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்களுக்கு இஞ்சி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது நம் அனைவருக்கும் தெரியும். இஞ்சியில் பல மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.

இஞ்சி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

1. குமட்டல் ஏற்படாமல் தடுக்கும்:

குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படாமல் தடுக்கிறது. மேலும்,  காலையில் ஏற்படும் சில உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தாமல் தடுப்பதற்கு இஞ்சி தடுக்கிறது.

2. வீக்கத்தை கட்டுப்படுத்தும்:

இயற்கை வலி நிவாரணிகயாக இஞ்சி செயல்படுகிறது. மூட்டுக்களில் ஏற்படும் வலிகளை இஞ்சி குறைக்கிறது. நமக்கு வலி ஏற்படாமல் தடுக்க உதவுகிற endorphin என்ற பொருளை நம் உடலில் அதிக அளவில் சுரக்க செய்கிறது.

3. இதய நோய்கள் வராமல் தடுக்கும்:

ரத்தம் உறைதலே பக்கவாதம், வலிப்பு நோய் வருவதற்கான முக்கிய காரணியாக இருக்கிறது. ரத்தத்தை உறையச்செய்யாமல் இருக்க வைட்டமின் கே சத்து உதவுகிறது. இஞ்சி சாப்பிடுவதன் மூலம், நம் உடலுக்கு வைட்டமின் கே சத்து கிறைக்கிறது.

4.சர்க்கரை அளவை குறைக்கும்:

இஞ்சி சாப்பிடுவது, நம் உடலில் இன்சுலின் சத்தை அதிக அளவில் சுரக்க செய்து, சர்க்கரை நோய் வராமல் செய்கிறது. 

5.நோய் கிருமிகளை எதிர்க்கும்:

நோய் ஏற்படுத்தும் கிருமிகளான பாக்டீரியா, fungai போன்ற சில கிருமிகளை நம் உடம்பிற்குள் வரவிடாமல் இஞ்சி சாப்பிடுவது தடுகிறது.