தேசிய மருத்துவ கவுன்சில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 500 தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசு புதிய மருத்துவ கவுன்சில் அமைக்க முயற்சித்து வருகிறது. இதனால், மாநிலங்களின் உரிமை பறிக்கப்படும் என்றும், ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி எட்டாக் கனியாக மாறும் என்றும் எதிர்ப்பு தெரிவித்து, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், 12 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 400 மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் காலை 6 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையொட்டி உள்நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
source:
http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/28/7/2018/doctors-strike-tamil-nadu