செவ்வாய், 17 ஜூலை, 2018

பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறையை அனுமதிக்க முடியாது : உச்சநீதிமன்றம் July 17, 2018

Image



பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பசுக்களை பாதுகாப்பதாக கூறி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை நிகழ்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பான வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுக்க யாருக்கும் உரிமையில்லை என தெரிவித்தது.

மக்களின் அச்சத்தை போக்க மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து நாடாளுமன்றம் ஆலோசிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வன்முறைகளை தடுக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து ராஜஸ்தான், ஹரியானா, உத்தரபிரதேச மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தது.