ஞாயிறு, 22 ஜூலை, 2018

அமெரிக்காவில் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு தடை..! July 22, 2018

Image

குளிர்பானங்களை பருகிவிட்டு தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் STRAW-க்கள் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அதனை பயன்படுத்த அமெரிக்காவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க உணவு கலாச்சாரத்தில் இடம்பிடித்த பிளாஸ்டிக் ஸ்டிராக்களுக்கு, புளோரிடா, நியூ ஜெர்ஸி மற்றும் கலிபோர்னியா  நகரங்களில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் ஸ்டிராக்களுக்கு மாற்றாக, பேப்பர் ஸ்டிராக்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு 30 கோடி மைக்ரே பைபர் பிளாஸ்டிக்குகள் ஹட்சன் ஆறு மூலம் அட்லாண்டிக் பெருங்கடலில் கலப்பதும், ஸ்டிராக்கள் மீதான தடைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.