புதன், 18 ஜூலை, 2018

வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு July 18, 2018

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒர் இரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - தென் மேற்கு பருவமழை வலுப்பெற்று வரும் நிலையில் நீலகிரி கோவை,தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒர் இரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு பருவமழை வலுப்பெற்று வரும் நிலையில் நீலகிரி கோவை,தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்ததில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லரில் தலா 10 செ மீட்டர் மழையும் வால்பாறையுல் தலா 9 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

மேலும் நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் தலா 4செ.மீட்டர் மழையும்,தேனி மாவட்டம் பெரியார் மற்றும் நீலகிரி மாவட்டம் தேவாலாவில் தலா 3 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்,சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு  உள்ளது,
அதிகப்பட்சமாக 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.