
உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கையை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சமூக வலைதளங்களான வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றை கண்காணிக்க மையம் ஒன்றை அமைக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முடிவு செய்திருந்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 13-ம் தேதி விசாரணைக்கு வந்த போது உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
இது தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், சமூக வலைதளங்களான வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றை கண்காணிக்கும் திட்டத்தை திரும்பப் பெறுவதாக தெரிவித்தார்.