வியாழன், 1 நவம்பர், 2018

மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2 ரூபாய் 94 காசுகள் உயர்வு! November 1, 2018

Image

மானிய சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு 2 ரூபாய் 94 காசுகள் உயர்ந்துள்ளது. 

சமையல் எரிவாயு விலை மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் மானிய விலை எரிவாயு சிலிண்டருக்கு 2 ரூபாய் 94 காசுகள் வீதம் உயர்த்தப்பட்டது. ஜி.எஸ்.டி. வரியின் தாக்கமே இதற்கு காரணம் என்று இந்திய எண்ணெய் கழகம் தெரிவித்துள்ளது. 

டெல்லியில் 502 ரூபாய் 40 காசுகளாக ஆக இருந்த எரிவாயு விலை, 505 ரூபாய் 34 காசுகளாக உயர்ந்தது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை தொடர்ச்சியான 6–வது விலை உயர்வு இது. அதுபோல், மானியம் அல்லாத சமையல் எரிவாயு விலை, சிலிண்டருக்கு 60 ரூபாய் உயர்ந்தது.

Related Posts: