புதன், 31 ஜூலை, 2019

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் 52% இடங்கள் நிரப்பப்படாமல் காலி...! July 31, 2019

பொறியியல் கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில், இந்த கல்வி ஆண்டில் 52 சதவீத இடங்கள் காலியாக உள்ளது தெரியவந்துள்ளது.  ஜூன் 28-ல் தொடங்கிய பொறியியல் கலந்தாய்வு இன்று அதிகாலை 3 மணியளவில் முடிவடைந்தது. இதையடுத்து மாணவர்கள் சேர்க்கை விவரம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வின் மூலம் 83,396 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஜூலை 3 முதல் 27...

உன்னாவ் விவகாரம் : தலைமை நீதிபதி காட்டம்! July 31, 2019

ns7.tv உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்‍கப்பட்ட பெண் பாதுகாப்பு கோரி எழுதிய கடிதத்தை, தாமதமாக சமர்ப்பித்தது குறித்து அறிக்கை அளிக்கும்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  உன்னாவ் வழக்‍கில், பாதிக்‍கப்பட்ட பெண் மற்றும் அவரது வழக்‍கறிஞர் உள்ளிட்டோருடன் சென்ற கார் மீது, கடந்த சில தினங்களுக்கு முன் லாரி மோதிய விபத்தில் பெண்ணின் தாய்,...

சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் ஆளில்லா விமானத்தை வெற்றிகரமாக சோதனை செய்த சீனா...! July 31, 2019

n s7.tv சூரிய ஆற்றல் மூலம் இயங்கும், ஆளில்லா விமானத்தை சீனா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. MOZI 2 என பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் 8 ஆயிரம் மீட்டர் உயரம் வரை பறக்கும் திறன் கொண்டது.  இந்த சோலார் விமானத்தை எரிபொருள் மூலம் இயக்காமல் முற்றிலும் சூரிய ஒளி மூலம் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் சேமிக்கப்படும் சூரிய ஒளியை வைத்து, இரவு நேரத்திலும்...

TAMILNADU BOVINE BREEDING சட்டம் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவானது என புகார்! July 31, 2019

மாடுகளின் இனப்பெருக்க நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக தமிழக அரசால் இயற்றப்பட்டுள்ள TAMILNADU BOVINE BREEDING என்ற சட்டம் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவானது என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது.   தமிழகத்தில் மாடுகள் மற்றும் எருமைகளின் இனப்பெருக்க நடவடிக்கைளை முறைப்படுத்துவதற்காக, TAMILNADU BOVINE BREEDING ACT, 2019 என்ற சட்டத்தினை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. இந்தப்...

மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறியது முத்தலாக் தடை மசோதா! July 31, 2019

மக்களவையில் சில தினங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடை மசோதாவை, மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், அரசியல் பூதக்கண்ணாடி வழியாக, இந்த மசோதாவைப் பார்த்து, அதனை வாக்கு வங்கி அரசியலாக மாற்றிவிட வேண்டாம் என உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பேசிய பாஜக எம்.பி ராகேஷ் சின்ஹா, முத்தலாக் தடை மசோதாவை, நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு அனுப்புவது, தாலிபான் சிந்தாந்தத்திற்கு ஆதரவளிப்பது...

செவ்வாய், 30 ஜூலை, 2019

பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் மணிரத்னம் கையெழுத்திட்டாரா? -சுஹாசினி விளக்கம் July 29, 2019

திரைத்துறையைச் சேர்ந்த 49 பேர் சார்பாக பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இயக்குநர் மணிரத்னம் கையொப்பம் இடவில்லை என்று மணிரத்னம் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனால், கையெழுத்திட்டது உண்மைதான் என்று சுஹாசினி மணிரத்னம் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 24ம் தேதி ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல சொல்லி இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் தாக்கப்படுவது குறித்து, இயக்குநர் அபர்ணா...

மத்திய அரசால் எதற்காக கொண்டுவரப்படுகிறது அணைப்பாதுகாப்பு சட்டம்...? July 30, 2019

இந்தியாவில் உள்ள அனைத்து அணைகளையும் பாதுகாக்க மத்திய அரசு அணைப்பாதுகாப்பு சட்டத்தை இயற்றியுள்ளது. இந்த அணைப்பாதுகாப்பு சட்டத்தால் தமிழகத்திற்கு சொந்தமான அணைகளின் நிலை என்னவாகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா முழுக்க 5264 பெரிய அணைகள் உள்ளன. இதில் 293 அணைகள் 100 ஆண்டுகள் பழமையானவை. 1,041 அணைகள் 50 ஆண்டுகள் பழமையானவை. மேலும் 437 அணைகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன....

கீழடி அகழாய்வில் 4வது உறைகிணறு, மண்பானை, மூடி கண்டெடுப்பு! July 30, 2019

கீழடி அகழாய்வில் 4வது பழங்கால உறைக்கிணறு கண்டெடுக்கப்பட்டதால், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தண்ணீரை பாதுகாப்பாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு தொடங்கியுள்ளது. முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு ஆகியோரது நிலத்தில் இந்த அகழாய்வு நடந்து வருகிறது. கடந்த மாதம் 13ம்...

தமிழின் தொன்மை குறித்த தவறான தகவல் : 13 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்! July 30, 2019

தேசிய அளவில் கல்வியில் மாற்றங்கள் நடந்து கொண்டிருக்க, தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு புத்தகத்தில் தமிழின் தொன்மை குறித்து தவறாக அச்சடிக்கப்பட்டது பற்றி விளக்கம் கேட்டு, 13 பேருக்கு இப்போது நோட்டீஸ் பறந்திருக்கிறது. 12ஆம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தின், பக்கம் எண் 142ல், தமிழ் செம்மொழி என்ற தலைப்பின் கீழ் பல்வேறு மொழிகளின் காலவரிசை அச்சடிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழ்...

திங்கள், 29 ஜூலை, 2019

மத்திய அரசை கடுமையாக சாடிய வைகோ..! July 29, 2019

மத்திய அரசு வரலாற்றை மாற்றியமைத்து மோசடி செய்வதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 12-ம் வகுப்பு பாட புத்தகத்தில், தமிழ் மொழி கி.மு 300 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும், சமஸ்கிருதம் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய மொழி எனவும், பொய்யை திணித்துள்ளதாக குற்றம்சாட்டினார். மத்திய அரசு,...

25 ஆண்டுகள் கழித்தும் படித்த பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்.! July 29, 2019

திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளியின் முன்னாள் மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஸ்ரீ விவேகானந்தா வித்யாவனம் உயர்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். முக்கொம்பு ஸ்ரீராமகிருஷ்ணா தபோவனத்தில்...

தமிழகத்தில் குறைந்து வரும் பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை..! July 29, 2019

credit ns7.tv பொறியியல் படிப்புகளுக்கான நான்காம் கட்ட கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில், 16 கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேரவில்லை என்பது, தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 479 பொறியியல் கல்லூரிகளில், பி.இ மற்றும் பி.டெக் பொறியியல் பட்ட மேற்படிப்புகளுக்கு, சுமார் 1 லட்சத்து 72 ஆயிரத்து 940 இடங்கள் உள்ளன. இதற்கான கலந்தாய்வு கடந்த 3ம் தேதி துவங்கி நான்கு கட்டங்களாக...

....பெற்றோர்கள் உஷார்

வாடா மாநிலத்தவர் தமிழகத்தில் ஊடுருவல், சிறுவர்களை கடத்தி விற்கும் அவலம், முஸ்லிம்கள் போல் பார்த்த அணிந்து, சிறுவர்களைக்கடத்தும் பெண்களை கன்யாகுமரியில் கைது ....பெற்றோர்கள் உஷார் ...

ஞாயிறு, 28 ஜூலை, 2019

இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு! July 28, 2019

இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்துள்ளது.  இதுகுறித்து வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் மாதாந்திர பயனாளர்கள் எண்ணிக்கை 40 கோடியை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 20 கோடியாக இருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை...

வாழைப்பழத்திற்கும் GST வரி விதித்த ஹோட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்..! July 28, 2019

2 வாழைப்பழங்களுக்கு 67 ரூபாய் ஜி.எஸ்.டி வரி வசூலித்த விவகாரத்தில், சண்டிகரில் உள்ள JW Marriott நட்சத்திர ஹோட்டலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  பிரபல பாலிவுட் நடிகரான ராகுல் போஸ், தமிழில் கமல் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். படப்பிடிப்பு ஒன்றிற்காக சண்டிகர் சென்றிருந்த அவர், அங்குள்ள  நட்சத்திர ஹோட்டலில்...

மின்சார கார்களுக்கான ஜி.எஸ்.டி 5% குறைப்பு...! July 27, 2019

மின்சார கார்களுக்கான ஜி.எஸ்.டி 5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் ஒன்று முதல் வரி குறைப்பு அமலுக்கு வரும் என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 36வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வீடியோ கான்பரஸிங் மூலம் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பின்னர், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,...

அரசு மருத்துவ கல்லூரிகளில் சுமார் 146 இடங்கள் காலியாக உள்ளதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவிப்பு! July 28, 2019

மருத்துவ படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு முடிவில் தமிழகம் முழுவதும் உள்ள 23 அரசு மருத்துவ கல்லூரிகளில் சுமார் 146 இடங்கள் காலியாக உள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த 8ம் தேதி தமிழ்நாடு ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில்...

வேலூர் தேர்தலில் அதிமுகவுக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிட்டதா ரவீந்திரநாத்தின் முத்தலாக் ஆதரவு நிலைப்பாடு? July 27, 2019

நடைபெற இருக்கும் வேலூர் தொகுதி தேர்தல் களம் தற்போது உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. இந்த தேர்தலில் எதை வைத்து பிரச்சாராம் செய்யப்போகிறார்,எந்த விவகாரம் வேலூர் தேர்தலில் பேசு பொருளாக இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.எந்த அலையும் வீசாத வேலூரில் ஸ்டாலின் எதை முன்னிறுத்த போகிறார், எதை வைத்து பிரச்சாரம் செய்யப்போகிறார் என்ற சந்தேகத்தை தொடர்ச்சியாக எழுப்புகின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இந்த இடத்தில் தான் முத்தலாக் விவகாரத்தில்...

சனி, 27 ஜூலை, 2019

மும்பை வெள்ளத்தில் சிக்கி கொண்ட ரயில்! July 27, 2019

மும்பையில் வெள்ளத்தில் சிக்கிய ரயிலில் உள்ள பயணிகளை பத்திரமாக மீட்கும் பணி நடந்து வருகிறது.  மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாட்டுங்கா, முக்கிய வர்த்தகப் பகுதியான நரிமன் பாயிண்ட் உள்ளிட்ட இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தொடர் மழை காரணமாக, பத்லாபூர் ரயில் நிலையத்தை மழை நீர் சூழ்ந்ததால், தண்டவாளங்கள்...

4 வழிச் சாலை திட்டத்திற்கு எதிராக கிராம மக்கள் போராட்டம்.! July 27, 2019

தமிழக அரசின் நான்கு வழிச்சாலை திட்டத்திற்காக  விளை நிலங்களையும், வீடுகளையும் கையகப்படுத்துவதை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் மருதாடு பகுதியில் இருந்து விழுப்புரம் மாவட்டத்தை இணைக்கும் மடப்பட்டு வரை  நான்கு வழி சாலை அமைக்கும் திட்டத்திற்கு  விஸ்வநாதபுரம்,...

ப்ளஸ் டூ பாடப் புத்தகத்தில் தமிழின் தொன்மை குறித்த தவறான பகுதி நீக்கப்படும் : அமைச்சர் அறிவிப்பு! July 27, 2019

தமிழை விட சமஸ்கிருதமே தொன்மையானது என தமிழக அரசின் பன்னிரெண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் அச்சிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த தவறுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் 12ம் வகுப்புக்கு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்...

வெள்ளி, 26 ஜூலை, 2019

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு! July 26, 2019

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஒரு மாதத்திற்குள் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையில், பள்ளி வாகனத்தில் சென்ற மாணவியை, வாகன ஓட்டுநரும், அவரது உதவியாளரும் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, அனைத்து பள்ளி வாகனங்களிலும்...

மேட்டூர் அணையின் நீர்மட்டம், கடந்த 3 நாட்களில் 3 அடி உயர்வு...! July 26, 2019

கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த மூன்று நாட்களில் மூன்று அடி உயர்ந்துள்ளது.  கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு ஒன்பதாயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில்,...

RTI சட்ட திருத்த மசோதா நிறைவேறியது! July 26, 2019

credit ns7.tv எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே, தகவல் அறியும் உரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.  மத்திய தகவல் ஆணையரின் பதவிக்காலம், ஊதியம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வருவதற்கான சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இம்மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதத்தின் போது, மசோதாவை...

விவசாய நிலத்தில் விண்கல்? July 26, 2019

விவசாய நிலத்தில் நெருப்புடன் விழுந்தது விண்கல் என்ற பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலத்தின் மதுபானி மாவட்டத்தில் உள்ள மகாதேவா என்ற கிராமத்தில் கடந்த புதன் கிழமையன்று மதியம் வயல்களில் விவசாயிகள் வேலையில் ஈடுபட்டிருந்த போது வானத்தில் இருந்து நெருப்பு மற்றும் புகையுடன் கூடிய மர்மப் பொருள் ஒன்று பெரும் சத்தத்துடன் திடீரென வந்து விழுந்தது. மர்ம பொருள் விழுந்த...

இதயத்துடிப்பு குறைவதை எச்சரித்து ஒருவரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்! July 24, 2019

credit ns7.tv இதயத்துடிப்பின் வேகம் குறைவதை எச்சரித்ததால் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் சரியான நேரத்தில் சிகிச்சைப் பெற்று உயிர்பிழைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் எஸ்ஸெக்ஸ் நகரை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு இதழுக்கு, தொழில்நுட்பம் குறித்த கட்டுரைகளை எழுதித்தருபவர் பால் ஹட்டன். இவரது இதயத்துடிப்பு வழக்கத்திற்கு மாறாக மிக குறைவாக இருப்பதாக...

வியாழன், 25 ஜூலை, 2019

கனிமொழி குரல்

...

தனியார் பள்ளி vs அரசு பள்ளி !

...

குழந்தைகள் கல்வி

...

ஸ்டாலினுடன் இஸ்லாமிய தலைவர்கள் சந்திப்பு! July 25, 2019

தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமை, இஸ்லாமிய சமுதாயத்தை குறி வைத்து கைது நடவடிக்கை, சோதனைகளை மேற்கொண்டு வருவதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.  அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை, இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் சந்தித்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஜவாஹிருல்லா, அமைதிப் பூங்காவான தமிழகத்தில் பீதியை எழுப்பும்...

புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு! July 25, 2019

புதிய கல்விக் கொள்கையை கண்டித்து கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி மாணவ மாணவியர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைத்த புதிய கல்விக் கொள்கை சமூக நீதிக்கும் சம உரிமைக்கு எதிராக இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆறு வயதில் இருந்து மூன்றாவதாக ஒரு மொழி கற்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு முரணான அம்சங்கள்...