சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா பாதிப்பிற்கு, மாஸ்கோவின் காமலியா இன்ஸ்ட்டியூட் கண்டுபிடித்துள்ள தடுப்பு மருந்தின் சோதனை நிறைவு பெற்றுள்ளது. இந்த மருந்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக, ரஷ்யாவிலிருந்து வெளியாகும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த புதிய தடுப்பு மருந்து, அக்டோபர் மாதத்தில் மக்கள் பயன்பாட்டு வர உள்ளது. முதற்கட்டமாக மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த தடுப்பு மருந்து அளிக்கப்பட்ட பிறகு, பொதுமக்களுக்கு வழங்கப்பட இருப்பதாக ரஷ்யா சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய தடுப்பு மருந்துக்கான முழுமையான சோதனைகளும் நிறைவடைந்துள்ளதாக எவ்வித தகவலும் இல்லை. அல்லது இரண்டு கட்ட சோதனைகள் மற்றும் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிலிருந்து வெளியாகும் டாஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, ஜூலை 13ம் தேதி தான் புதிய தடுப்பு மருந்தின் இரண்டாம் கட்ட சோதனையின் ஒருபகுதியாக மனிதர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியின் திறனை கண்டறியும் விதத்திலான இந்த சோதனைக்கு சில மாதங்கள் பிடிக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு சர்வதேச அளவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகள் உருவாக்குவதில் நாடுகளுக்கிடையே கடும்போட்டி உருவாகியுள்ளது. தடுப்பு மருந்து சோதனைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், ரஷ்யா, கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், 3ம் கட்ட சோதனைகளை நடத்தாமலேயே அது இவ்வாறு தெரிவித்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. 3ம் கட்ட சோதனையின் மூலமே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மனிதர்களை இந்த மருந்து எவ்விதம் குணப்படுத்துகிறது என்பதை கண்டுபிடிக்க முடியும். இந்த தடுப்பு மருந்தின் மூலம்,கொரோனா தொற்றுக்கு எதிரான நோய்த்தடுப்பாற்றில் மனிதர்களில் உருவாகியுள்ளதா என்பதை அறிவது கட்டாயம். மூன்றாம் கட்ட சோதனை, பல ஆயிரம் மக்களிடையே நடத்தப்பட வேண்டும். இந்த சோதனையின் முடிவுகள் வெளியாக பல மாதஙகள் முதல் சில ஆண்டுகள் வரை கூட ஆகலாம்.
பொதுபயன்பாட்டிற்கு தடுப்பு மருந்தை வழங்கியபின்னர், 3ம் கட்ட சோதனைகளும் ஒருபுறமாக நடைபெறும் என்று அந்த பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ள நிலையில், இது எந்தளவிற்கு உண்மை என்பது புரியாத புதிராகவே உள்ளது.
தடுப்பு மருந்துக்கான சோதனைகள் நிறைவடைந்துவிட்டால் அது மட்டும் பொது பயன்பாட்டிற்கு தடுப்பு மருந்தை வழங்கலாம் என்பதற்கான சான்று அல்ல. சோதனைகளின் மூலம் கிடைக்கும் தரவுகளை ஆராய்ந்து, அதன்பின்னரே அது மதிப்பீடு செய்யப்படும். பல்வேறு சோதனைகளில் கிடைத்த முடிவுகள், ஒழுங்குமுறை அமைப்பால் நிராகரிக்கவே பட்டுள்ளன. மிகச்சிறிய அளவிலேயே சோதனைகளின் தேர்வான தடுப்பு மருந்துகள், பொதுப்பயன்பாட்டிற்கு வந்துள்ளன. ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்துக்கு, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதல் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதன் பின்னணியில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதாக அமெரிக்காவின் முன்னணி தொற்று நோயியல் சிகிச்சை நிபுணர் ஆண்டனி பெளசி தெரிவித்துள்ளார்.
பெளசி தெரிவித்துள்ளதாவது, சீனர்களும், ரஷ்யர்களும் தாங்கள் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு முன்பாகவே, அதனை எல்லாகட்ட சோதனைகளுக்கும் உட்படுத்த வேண்டும். அப்போதுதான் புதிய மருந்தால் ஏற்படும் பக்கவிளைவுகள் மிகக்குறைந்த அளவில் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனா கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்து 2ம் கட்ட சோதனை முடிந்தவுடனேயே, மக்களுக்கு பயன்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. அந்த நேரத்தில், ராணுவ வீரர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த மருந்து பொதுமக்களுக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்தை சோதனை செய்ய சீரம் இன்ஸ்ட்டியூட் தலைமையில் நிபுணர் குழு அமைப்பு
ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், இந்தியாவில் அந்த மருந்து குறித்த சோதனைகளை மேற்கொள்ள புனேயில் உள்ள சீரம் இன்ஸ்ட்டியூட் முன்வந்துள்ளது. இதனையடுத்து, அந்த இன்ஸ்ட்டியூட், தங்களது விதிமுறைகளை மாற்றியமைத்து மேலும் பல புதிய தகவல்களை சேர்த்துள்ளது.
சீரம் இன்ஸ்ட்டியூட், சர்வதேச அளவில் அதிகளவில் தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். அஸ்ட்ராஜெனிகா நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்துடன் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை, புனேயில் உள்ள சீரம் இன்ஸ்ட்டியூட்டில் பரிசோதித்து பின் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் கொண்ட நாடுகளின் பயன்பாட்டிற்காக, இங்கு அந்த தடுப்பு மருந்து தயாரிக்கப்பட உள்ளது.
இந்தியாவில், இந்த மருந்துக்கு ‘Covishield’ என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், 3ம் கட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த சோதனை. தற்போது 1600 மனிதர்களிடம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சோதனையில் இதுவரை
160 பேருக்கு சோதனைக்கு முந்தைய நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன
இவர்களில் 23 பேர் சோதனைக்குட்பட்டுத்தப்பட்டுள்ளனர்
3ம் கட்ட சோதனைக்காக 6 பேர் இறுதிக்கட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இந்த சோதனைக்கு குறைந்தது 8 பேர் உட்படுத்தப்பட உள்ளனர்.
(Source: WHO Coronavirus vaccine landscape of July 31, 2020)