வெள்ளி, 4 செப்டம்பர், 2020

பூமியின் சுற்றுப்பாதையை கடக்க இருக்கும் விண்கல்

 Mehr Gill

கிசா பிரமிட்டை விட இரண்டு மடங்கு பெரிய விண்கல்லான 465824 2010 FR செப்டம்பர் 6 ஆம் தேதி பூமியின் சுற்றுப்பாதையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 465824 2010 FR என்ற விண்கல்லை நாசா கண்காணித்து வருகிறது. இது எர்த் நியர் ஆப்ஜெக்ட் என்றும் (என்இஓ) மற்றும் அபாயகரமான சிறுகோள் ( potentially hazardous asteroid (PHA)) என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சூரியனை சுற்றும் எர்த் நியர் ஆப்ஜெக்ட் எப்போதாவது தான் பூமிக்கு அருகில் வருகிறது. அது போன்ற சமயங்களில் நாசாவின் நியர் எர்த் ஆப்ஜெக்ட் ஸ்டடி (NASA’s Center for Near-Earth Object Study (CNEOS)) மையம் பூமிக்கும் அந்த விண்கல்லுக்கும் இடையேயான தூரத்தை ஆராய்கிறது. மற்ற கோள்களின் ஈர்ப்பு விசையால் புவியின் சுற்றுப்பாதைக்குள் நுழையும் நியர் எர்த் ஆப்ஜெக்டை விண்கற்கள் மற்றும் வால்மீன்கள் என்று நாசா வரையறுக்கிறது. நீர் பனி மற்றும் தூசித்துகள்களால் இவை உருவாக்கப்பட்டிருக்கும். சிறுகோள் 465824 2010 FR மார்ச் 18, 2010 அன்று கேடலினா ஸ்கை சர்வே (சிஎஸ்எஸ்) மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

பாறைகளால் ஆன விண்கற்கள் சூரியனை வலம் வருகிறது. மற்ற கோள்களைக்காட்டிலும் அளவில் சிறியவை. சில நேரங்களில் நாம் இவற்றை சிறு கோள்கள் என்றும் அழைக்கின்றோம். விண்வெளியில் 994,383 அடையாளம் காணப்பட்ட விண்கற்கள் உள்ளன. சூரிய குடும்பம் 4.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான போது ஏற்பட்ட எச்சங்கள் என்றும் கூறுகின்றோம்.

பெரும்பாலான விண்கற்களை செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு மத்தியில் அமைந்திருக்கும் விண்கற்கள் பெல்ட்டில் காண முடியும். 1.1 மில்லியனில் இருந்து 1.9 மில்லியன் விண்கற்கள் அங்கே இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அங்கு விண்கற்கள் அதிக அளவில் செறிவுடன் இருப்பதற்கான காரணம் வியாழன் கோளின் உருவாக்கத்தில் இருந்து துவங்குகிறது. சூரிய குடும்பத்தில் வேறெந்த புதிய கோள்கள் உருவாவதையும் வியாழனின் புவி ஈர்ப்பு விசை தடுக்கிறது என்பதால் சின்னஞ்சிறிய கோள்கள் ஒன்றோடு ஒன்று உரசி விண்கற்களாக துண்டு துண்டாகிறது.

பிரதான சிறுகோள் பெல்ட்டில் காணப்படுவதைத் தவிர, சிறுகோள்களை ட்ரோஜான்களாக வகைப்படுத்தலாம், அவை பெரிய கோள்களின் சுற்றுப்பாதையை பகிர்ந்து கொள்ளும். வியாழன், நெப்டியூன் மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு ட்ரோஜான்கள் இருப்பதை நாசா தெரிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டில், பூமிக்கும் ஒரு ட்ரோஜன் இருப்பதை தெரிவித்தனர்.

விண்கற்களின் மூன்றாவது வகைப்பாடு பூமிக்கு அருகில் செல்லும் சுற்றுப்பாதைகளைக் கொண்ட சிறுகோள்கள் (NEA). பூமியின் சுற்றுப்பாதையை கடக்கும் சிறுகோள்கள் பூமி-குறுக்குவெட்டுகள் (Earth Crossers) என்று அழைக்கப்படுகிறது. இதுபோன்ற 10,000 க்கும் மேற்பட்ட சிறுகோள்கள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றில் 1,400 க்கும் மேற்பட்டவை அபாயகரமான சிறுகோள்கள் (PHA கள்) என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

விண்கற்கள் குறித்து ஏன் அவர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள்?

விண்கற்களும் மற்ற கோள்கள் உருவான அதே நேரத்தில் உருவானது என்பதால் சூரிய குடும்பம் மற்றும் அவற்றின் கோள்களின் உருவாக்கம் மற்றும் வரலாறு ஆகியவற்றை அறிந்து கொள்ள ஆராய்ச்சியாளர்கள் விண்கற்களை ஆராய்ச்சி செய்கின்றனர். அவற்றின் அபாயகரமான தன்மை குறித்தும் அறிந்து கொள்ள அவர்கள் இந்த சோதனையை மேற்கொள்கின்றனர்.

விண்கற்கள் ஏன் அபாயகரமானது?

தி பிளானட்டரி சொசைட்டி அறிவிப்பின் படி, 1 மீட்டருக்கு மேல் விட்டம் கொண்ட சுமார் 1 பில்லியன் சிறுகோள்கள் விண்வெளியில் உள்ளது. குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தக்கூடிய விண்கற்கள் என்பது 30 மீட்டரை விட பெரியதாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும், சுமார் 30 சிறிய சிறுகோள்கள் பூமியைத் தாக்குகின்றன, ஆனால் தரையில் பெரிய சேதத்தை ஏற்படுத்துவதில்லை.

பூமிக்கு அச்சுறுத்தல் தரும் நெருக்கமான அணுகுமுறைகளை உருவாக்கும் சிறுகோளின் திறனை அளவிடும் அளவுருக்களின் அடிப்படையில் தற்போது அபாயகரமான சிறுகோள்கள் (PHA கள்) வரையறுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 0.05 au அல்லது அதற்கும் குறைவான குறைந்தபட்ச சுற்றுப்பாதை குறுக்குவெட்டு தூரம் (minimum orbit intersection distance (MOID)) கொண்ட அனைத்து சிறுகோள்களும் அபாயகரமான சிறுகோள்களாக கருதப்படுகின்றன என்று நாசா கூறியுள்ளது. அபாயகரமான விண்கற்கள் என்று வரையறுக்கப்பட்டவை அனைத்தும் பூமிக்கு பிரச்சனை தரக்கூடியவை என்று கூறிவிட இயலாது. பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் என்ற எச்சரிக்கையை மட்டுமே வழங்குகிறது. தொடர்ந்து இந்த விண்கற்களை ஆராய்ந்து வருவதும், அவற்றை பற்றி கிடைக்கும் புதிய தகவல்களும் பூமிக்கு அருகே வரும் வாய்ப்புகளை பற்றி அறிந்து கொள்ள உதவும்.

140 மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட அளவுடைய ( சிறிய கால்பந்து மைதானத்தை விட கொஞ்சம் பெரிய) அனைத்து விண்கற்களையும் நாசா கண்டறிந்து அதனை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி வருகிறது. இதனால் ஏற்படும் பேரழிவின் தாக்கம் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் இவைகளை பற்றி தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறது நாசா. ஆனாலும் 140 மீட்டர் அளவுக்கு மேலே உள்ள எந்த ஒரு விண்கல்லும் அடுத்த 100 ஆண்டுகளுக்கு பூமியை தாக்க வாய்ப்பில்லை என்கிறது ஆராய்ச்சிகள்.

சிறுகோள்களை எவ்வாறு திசை திருப்ப இயலும்?

பல ஆண்டுகளாக, ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு முறைகளை, சிறுகோள்களை தடுக்க, பரிந்துரை செய்து வருகின்றனர். பூமிக்கு வருவதற்கு முன்பே விண்கல்லை வெடிக்க செய்வது மற்றும் ஸ்பேஸ்கிராஃப்டை பயன்படுத்தி அதனை வெடிக்க செய்வது போன்ற யுக்திகளை கூறுகின்றனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் மிகவும் கடுமையானது Asteroid Impact and Deflection Assessment (AIDA) தான். இதில் நாசாவின் டபுள் ஆஸ்ட்ராய்ட் ரீடேரக்‌ஷன் டெஸ்ட் மிஷன் மற்றும் யூரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்ஸி ஹெரா ஆகியவையும் இதில் இணைந்து செயல்பட்டது. மிஷனின் இலக்கு பூமிக்கு அருகிலுள்ள ஒரு பைனரி டிடிமோஸ் ஆகும், அதன் குறிப்பிட்ட பகுதிகள் பூமிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

2021ம் ஆண்டில் அறிமுக செய்யப்பட இருக்கும் டார்ட்டின் கட்டுமானம் 2018ம் ஆண்டில் துவங்க இருப்பதாக நாசா அறிவித்தது. டிடிமோஸில் இருக்கும் ஒரு சிறிய விண்கல்லை உடைக்க 2022ம் ஆண்டில் ஒரு நொடிக்கு 6 கி.மீ பயணிக்கும் சிஸ்டத்தை உருவாக்க உள்ளதாகவும் கூறியிருந்தது. ஹெரா 2024ம் ஆண்டில் உருவாக்கப்பட உள்ளது. DART மோதலால் உருவாகும் தாக்க பள்ளத்தை அளவிடுவதற்கும், சிறுகோளின் சுற்றுப்பாதைப் பாதையில் ஏற்படும் மாற்றத்தைப் படிப்பதற்கும் 2027 ஆம் ஆண்டில் செயல்பாட்டிற்கு வரும்.

விண்கற்கள் எவ்வாறு பெயரிடப்படுகின்றன?

அவை சர்வதேச வானியல் ஒன்றியம் (IAU) -த்தால் பெயரிடப்பட்டுள்ளன. சிறிய அளவிலான பொருட்களுக்கு பெயரிட IAUஇன் குழுக்கள் குறைந்த பட்ச கண்டிப்புடன் செயல்படுகிறது என்று நாசா கூறியுள்ளது. ஸ்டார் ட்ரெக் கதாபாத்திரமான மிஸ்டர் ஸ்போக், ராக் இசைக்கலைஞர் ஃபிராங்க் ஜாப்பா மற்றும் கொலம்பியா விண்வெளி விண்கலத்தின் குழு உறுப்பினர்கள் 7 பேர்களின் பெயர்களை சிறுகோள்களுக்கு சூட்டியுள்ளன. அதன் அமைவிடம் மற்றும் பலவிதமான விஷயங்களுக்கும் சிறுகோள்கள் பெயரிடப்பட்டுள்ளன, மேலும் செல்லப்பிராணிகளின் பெயர்களை சிறுகோள்களுக்கு பெயரிடுவதை IAU கண்டிக்கிறது.