டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக்கழகங்கள் 2021 தரவரிசையில் இந்தியாவில் இருந்து அதிகமான கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. 63 இந்திய நிறுவனங்கள் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும், முதல் 300 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்றுகூட இடம் பெறவில்லை.
சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகம் முதல் 20 இடங்களுக்குள் வந்த முதல் ஆசிய பல்கலைக்கழகமாக என்ற பெருமையை தட்டி சென்றது.
முதல் 200 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் அமெரிக்காவின் 59 கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. இங்கிலாந்து 29 இடங்களையும், ஜெர்மனி 21 இடங்களையும் கைப்பற்றியது.
டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக்கழகங்கள் 2021 தரவரிசை கற்பித்தல், ஆராய்ச்சி, அறிவு பரிமாற்றம், சர்வதேச கண்ணோட்டம் உள்ளிட்ட குறியீட்டு அம்சங்களின் அடிப்படையில், 93 நாடுகள் (அ) பிராந்தியங்களைச் சேர்ந்த 1527 உயர் கல்வி நிறுவனங்கள் தரவரிசைப்படுத்தப்படுகின்றனர்.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 5 -வது ஆண்டாக முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இருப்பினும், “ஆசியாவில் கல்வி நிறுவனங்கள் மாணவர்களை தொடர்ந்து ஈர்த்து வருவதால், உயர்கல்வியில் இங்கிலாந்து நிலை சவாலாக உள்ளது” என்று அறிக்கை குறிப்பிட்டது. கடந்த ஆண்டு தரவரிசையில் இடம்பெற்ற இங்கிலாந்தின் முதல் 20 கல்வி நிறுவனங்களில், 5 நிறுவனங்கள் மட்டுமே தற்போதைய தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளன.
இந்தியா கல்வி நிறுவனங்களில், ஐ.ஐ.எஸ்.சி கல்வி நிறுவனம் மீண்டும் பட்டியலில் உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது. உயர் கல்வி நிறுவனங்களுக்கான ‘’ இந்தியா தரவரிசை 2020 பட்டியலில் முன்னிலை பிடித்த ஐ.ஐ.டி-டெல்லி, பம்பாய், சென்னை ஆகிய நிறுவனங்கள் இந்த உலக பல்கலைக்கழகங்கள் தரவரிசைப் பட்டியலில் இடம் பெறவில்லை. ஐ. ஐ.டி மும்பை, டெல்லி, கான்பூர், குவஹாத்தி, மெட்ராஸ், ரூர்க்கி, கரக்பூர் உள்ளிட்ட ஏழு ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள் கடந்த ஆண்டு தரவரிசையில் இருந்து விலகுவதாக அறிவித்ததும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
“இந்தியாவில், 1986 க்குப் பிறகு தேசிய கல்விக் கொள்கை 2020க்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பல்கலைக்கழக வளாகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கல்வி கொள்கையில் பரிந்துரைக்கிறது. புதிய சட்டம் இயற்றப்பட்டு, உலகின் சிறந்த 100 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் செயல்பட ‘வசதி’ செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம், உலகளாவிய அறிஞர்கள், சிந்தனையாளர்கள், மாணவர்களை இந்தியா ஈர்க்கமுடியும். வரும் காலங்களில் உலக பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் இந்தியா முன்னேற்றமடியும் ”என்று டைம்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பில் பாட்டி தெரிவித்தார்.