வியாழன், 1 பிப்ரவரி, 2018

ஆரஞ்சு’ நிற பாஸ்போர்ட் திட்டத்தை கைவிட்ட மத்திய அரசு! January 31, 2018

Image

முகவரி இல்லாமல் ஆரஞ்சு நிறத்தில் பாஸ்போர்ட் வழங்கும் திட்டத்தைக் கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கல்வித்தகுதியின் அடிப்படையில் கடைசிப் பக்கத்தில் முகவரி இல்லாமல் ஆரஞ்சு நிறத்தில் பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்ட நிலையில் மத்திய அரசு இம்முடிவைக் கைவிட்டுள்ளது. பாஸ்போர்ட் வழங்குவதில் பழைய முறையே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.