வெள்ளி, 1 ஜூன், 2018

பாதுகாப்பான இணைய பயன்பாடு குறித்து இந்தியப் பெண்களுக்கு பயிற்சியளிக்கப்போகும் ஃபேஸ்புக்! May 31, 2018

Image

பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்துவது குறித்து தேசிய பெண்கள் ஆணையத்துடன் இணைந்து இந்தியப் பெண்களுக்கு பயிற்சியளிக்க உள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜார்கண்டைச் சேர்ந்த Cyber Peace Foundation என்ற அமைப்பு, தேசிய பெண்கள் ஆணையம் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து இந்தியப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 60,000 பெண்களுக்கு இணையம், சமூக வலைத்தளம் மற்றும் மின்னஞ்சல் ஆகிவற்றை பாதுகாப்புடன் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து பயிற்சியளிக்க உள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம் மூலம் ‘டிஜிட்டல் கற்பித்தல் திட்டம்’ என்ற பெயரிலான இப்பயிற்சியினை தமிழ்நாடு, மகராஷ்டிரா, மேகாலயா, சிக்கிம், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளையும் சேர்ந்த 60,000 பெண்கள் பெற உள்ளனர். இப்பயிற்சி அந்தந்த வட்டார மொழிகளில் கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

தற்சமயம் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் இணையத்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளதால், சைபர் குற்றங்களுக்கு பெண்கள் இலக்காகி வருவது கடந்த 3 ஆண்டுகளில் பெருமளவில் அதிகரித்துள்ளதால் கவலையடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள தேசிய பெண்கள் ஆணையம், இணையம் பயன்படுத்தும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய இந்த பயிற்சி பயன்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் மேம்பட பெண்கள் தங்குதடையற்ற இருப்பை இணையத்தில் சாத்தியமாக்க வேண்டும் என்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்தியா, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பொது கொள்கை இயக்குனர் அங்கிதாஸ் குறிப்பிட்டுள்ளார்.