வியாழன், 9 ஆகஸ்ட், 2018

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழை: கபினியிலிருந்து வினாடிக்கு 70000 கனஅடி நீர் திறப்பு! August 9, 2018

Image

கர்நாடக அணைகளில் இருந்து முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, வினாடிக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழையால், அங்கு கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகள் கிடுகிடுவென உயர்ந்து, மீண்டும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் அணைக்கு வரும் நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து, வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடி நீரும், கபினியிலிருந்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. இரு அணைகளிலும் சேர்த்து வினாடிக்கு, ஒரு லட்சத்து 25 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால் காவிரி கரையோர மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது திறந்துவிடப்பட்டுள்ள காவிரி நீரானது, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை, நாளை மதியம் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.